Breaking : இன்றும் புதிய உச்சம்.. தாறுமாறாக உயர்ந்த தங்கம் விலை.. எவ்வளவு தெரியுமா?

gold new

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை இன்றும் அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது..

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. குறிப்பாக தங்கம் விலை ரூ.86,000-ல் இருந்து தற்போது ரூ.92,000ஐ தொட்டுள்ளது.. அதே போல் கடந்த வாரமும் தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வந்தது.. ஓரிரு நாட்கள் மட்டுமே விலை குறைந்தது.. அந்த வகையில் நேற்று ஒரே நாளில் ரூ.1,960 உயர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது..

இந்த நிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்றும் அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது.. அதன்படி தங்கம் விலை, ஒரு கிராமுக்கு ரூ.35 உயர்ந்து, ரூ.11,860க்கு விற்பனையாகிறது.. அதே போல் இன்று ஒரு சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.94,880-க்கு விற்பனையாகிறது.. தங்கம் விலை உயர்ந்து வருவது நகைப்பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது..

அதே போல் இன்று வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.. அதன்படி இன்று காலை ஒரு கிராம் வெள்ளி ரூ. 1 உயர்ந்து ரூ.207-க்குவிற்பனையாகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.2,07,000 விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

Read More : உங்கள் வீட்டில் அதிக பணம் சேராமல் இருப்பது ஏன் தெரியுமா..? நீங்கள் செய்யும் இந்த தவறை திருத்திக்கோங்க..!!

English Summary

The price of gold jewelry in Chennai has risen sharply again today, reaching a new high.

RUPA

Next Post

BHEL Jobs: பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை.. ரூ.90 ஆயிரம் வரை சம்பளம்..! உடனே விண்ணப்பிங்க..

Wed Oct 15 , 2025
BHEL Jobs: Job at Bharat Electronics.. Salary up to Rs.90 thousand..! Apply now..
BEL Job 2025 1

You May Like