fbpx

1 கோடி மக்கள் பட்டினியில் வாடும் அபாயம்…! தன்னார்வ அமைப்புகள் அதிர்ச்சி தகவல்…!

ஆப்பிரிக்க நாடான கென்யாவில், தற்போது கடும் வறட்சி காணப்படுகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளாகவே கென்யாவில் மழை பொழிவு சரிவர இல்லை. இதனால் பல்வேறு பகுதிகளில் உணவு உற்பத்தி பாதித்துள்ளது. இந்த நிலையில், இந்த  ஆண்டிலும் மழை பொழிவு சராசரி அளவை விட கீழே இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இதனால் கென்யாவில் நிலவும் வறட்சி குறித்து சமீபத்தில் சில தன்னார்வ அமைப்புகள் ஆய்வில் ஈடுபட்டன. தற்போது அவற்றின் முடிவுகள் வெளியாகி உள்ளன. அதில் கென்யாவில் அடுத்த மாதம் முதல் – மே மாதங்களில் 15 மாகாணங்கள் கடுமையான உணவுத் தட்டுப்பாட்டை சந்திக்க இருப்பதாகவும், இதனால் சுமார்  1 கோடி மக்கள் வரை பட்டினியால் பாதிக்கக் கூடும் என தெரிவித்துள்ளது.

குறிப்பாக வஜிர், மந்திரா, கார்சியா , துர்கானா, மர்சபிட், இசியோலோ, போன்ற பகுதிகள் கடுமையான வறட்சியை சந்திக்க உள்ளன. இதனால் சுமார் 40 லட்சத்திற்கும் அதிகமான மக்களுக்கு அவசரமான மனிதாபிமான உதவிகள் தேவைப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் உலகத் தலைவர்கள் இந்த விஷயத்தில் தலையிட்டு தேவையான நடவடிக்கைகள் எடுக்காமல் இருந்தால் அதிக மக்கள் பசியால் இறக்க நேரிடும் என தன்னார்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Kokila

Next Post

காணாமல் போன 3 வயது குழந்தை.. வாஷிங் மெஷினில் கிடந்த அவலம்.. மர்மம் அவிழாத வழக்கு..!

Sat Jan 14 , 2023
பிரான்ஸ் நாட்டு பகுதியில் வசிக்கும் தந்தை தனது மகளை காணவில்லை என்று காவல்துறையில் கூறியுள்ளார். அதே நேரத்தில் பாரீஸில் 3 வயது நிரம்பிய குழந்தை, வாஷிங் மெஷினில் கிடப்பதாக என்று தகவல் கிடைக்கப்பெற்றது. இதனையடுத்து சலவை இயந்திரத்தில் இருந்து சிறுமி மீட்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இரவு 11 மணி அளவில் அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனிடையில் வியாழன் அன்று இரவு […]

You May Like