fbpx

நடை பாலம் விபத்து…! ஒருவர் உயிரிழப்பு… 12 பேர் பலத்த காயம்…!

நடைபாலம் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு, 12 பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.

மகாராஷ்டிராவின் சந்திராபூரில் உள்ள பல்ஹர்ஷா ரயில்வே சந்திப்பில் மேம்பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் 48 வயது பெண் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 12 பேர் காயமடைந்தனர். ரயில் நடைமேடையில் அதன் கீழே நடந்து சென்ற பயணிகள் மீது படை பாலம் விழுந்தது. தகவல்களின்படி, உயர் மின்னழுத்த மேல்நிலை கம்பிகளுடன் தொடர்பு கொண்ட சில பயணிகள் படுகாயமடைந்தனர்.

பிளாட்பாரம் எண் 1 முதல் 5 வரை இணைக்கும் ஒரே FOB இதுதான். மாலை 5 மணியளவில், பல பயணிகள் ரயிலில் ஏற FOBஐக் கடந்து கொண்டிருந்தனர். எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்த விபத்தில் ஒருவர் மட்டுமே உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மீதமுள்ளவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Vignesh

Next Post

சீன அதிபருக்கு எதிராக கொந்தளிக்கும் மக்கள்..!! கொரோனா கட்டுப்பாடுகளால் கடும் அதிருப்தி..!!

Mon Nov 28 , 2022
கொரோனா கட்டுப்பாடுகளை திரும்பப் பெறக்கோரி சீன அதிபர் ஜின்பிங் மற்றும் அந்நாட்டின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக நாடு முழுவதும் மக்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. சீனாவின் வாழ்நாள் அதிபராக உள்ள ஜி ஜின்பிங், ஒட்டுமொத்த அதிகாரத்தையும் தனது கைப்பிடியில் வைத்துள்ளார். ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியைத் தவிர எந்த எதிர்க்கட்சியும் அந்நாட்டில் இல்லை. இதனால், எந்த எதிர்ப்பும் இல்லாததால், கொரோனா தொற்று விஷயத்தில் அவரது அரசு மிகக் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து […]
சீன அதிபருக்கு எதிராக கொந்தளிக்கும் மக்கள்..!! கொரோனா கட்டுப்பாடுகளால் கடும் அதிருப்தி..!!

You May Like