கேரளாவின் கரிப்பூர்விமான நிலையத்தில் வெளிநாட்டில் இருந்து வந்த பயணிகளிடம் சோதனை நடத்தப்பட்டதில் கேப்சூல்களில் மறைந்து கொண்டு வந்த ஒரு கிலோ தங்கம் சிக்கியது.

கரிப்பூர் விமானநிலையத்தில் வழக்கமாக அதிகாரிகள் சோதனை நடத்தினர் அப்போது துபாயில் இருந்து வந்த உமர்பரூக்கை சோதனை செய்தனர். அவர் வைத்திருந்த பையில் கருப்பு நிறத்தில் கேப்சூல்கள் போல ஏதோ வைத்திருந்திருக்கின்றார். மெடல் டிடக்டரில் சந்தேகத்திற்கிடமளிக்கும் வகையில் தென்பட்டுள்ளது. இதையடுத்து சோதனை செய்து விசாரித்தில் ஒரு கிலோ தங்கம் இருப்பது உறுதியானர்.. தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் உமர்பரூக்கிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைதான உமர் பரூக் கேரளாவின் கண்னூர் பகுதியைச் சேர்ந்தவராவார்