fbpx

உத்தரகாண்டில் மலையேறும் வீரர்கள் பனிச்சரிவில் சிக்கி 10 பேர் பலி…

உத்தராகண்டில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கிய 30 வீரர்களில் 10 பேர் உயிரிழந்துவிட்டதாக வரும் தகவல்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் திரௌபதி கா தண்டா – 2 என்ற சிகரத்தில் உத்தரகாசி பகுதியில் நேரு மலையேறும் பயிற்சி நிறுவனத்தைச் சேர்ந்த 29 வீரர்கள் மலை ஏறச் சென்றனர். அப்போது பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் 30 பேரும் சிக்கிக் கொண்டனர். தகவல் அறிந்து எஸ்.டி.ஆர்.எஃப் ராணவம் மற்றும் ஐ.டி.பி.பி. பணியாளர்களால் மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

சிக்கியவர்களை மீட்கும் பணிதுரிதமாக நடைபெற்று வருகின்றது. 10 பேர் இந்த விபத்தில் உயிரிழந்துவிட்டதாக  ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. 8 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. எனினும் எஞ்சியுள்ள 11பேரின் நிலை குறித்த தகவல் வெளியாகவில்லை.

ஐ.ஏ.எப் ஹெலிகாப்டர்கள் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்காக அனுப்பப்பட்டுள்ளது. இந்த ஹெலிகாப்டர் மூலம் தேடுதல் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக முதல்வர் புஷ்கர் சிங் தாமி தனது டுவிட்டர்பக்கத்தில் இது குறித்த பதிவில் , ’’ .. திரௌபதி  தாண்டா 2 மலைப்பகுதியில் பனிச்சரிவில் சிக்கிய பயிற்சியாளர்களை மீட்பதற்காக என்.டி.ஆர்.எப்., எஸ்.டி. ஆர். எப். ராணுவம் , என்.டி.ஆர்.எப்., எஸ்.டி. ஆர்.எப், ராணுவம் மற்றும் ஐ.டி.பி.பி. வீரர்கள் என்ஐஎம். குழுவுடன் இணைந்து விரைவான நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ’’ என்றார்.

இச்சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்து பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் டுவிட்டரில்தகவல் வெளியிட்டுள்ளார், ’’ உத்தரகாண்ட் முதல்வரிடம் பேசி நிலைமையை ஆய்வு செய்வதாக தெரிவித்தனர். பின்னர்மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள ஐ.ஏ.எப்.புக்கு நான் அறிவுறுத்தியுள்ளேன் . அனைவரின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்காக பிரார்த்தனை செய்கின்றேன். , ’’ என அவர் டுவிட் செய்துள்ளார். நிவாரணம் தொடர்பாகவும் விரைவில் அறிவிக்க உள்ளதாக தெரிவிககப்பட்டுள்ளது.

Next Post

தீபாவளி வரை திரையரங்குகளில் ’பொன்னியின் செல்வன்’ தான்..!! புதிய படங்களின் ரிலீஸ் தள்ளிவைப்பு..!!

Tue Oct 4 , 2022
‘பொன்னியின் செல்வன்’ படத்தைப் பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டுவதால், இந்த வாரம் வெளியாகவிருந்த சில தமிழ் திரைப்படங்கள் தள்ளிப் போகிறது. மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி செப்.30ஆம் தேதி வெளியான படம் ‘பொன்னியின் செல்வன்’. இந்தப் படத்திற்கு ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. டிக்கெட் விற்பனையிலும் பெரிய வசூலை குவித்து உலக அளவில் ரூ.200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. தொடர்ந்து ‘பொன்னியின் செல்வன்’ படம் பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டுவதால், […]
தீபாவளி வரை திரையரங்குகளில் ’பொன்னியின் செல்வன்’ தான்..!! புதிய படங்களின் ரிலீஸ் தள்ளிவைப்பு..!!

You May Like