fbpx

காங்கிரஸ் போட்டியிடும் 10 தொகுதிகள்..! இறுதியான தொகுதி பங்கீடு..!

Lok Sabha Elections 2024: தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 நடைபெறவுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை மக்களவைத் தேர்தலில், திமுக கூட்டணி அதிமுக கூட்டணி பாஜக கூட்டணி, நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி நிலவி வருகிறது. மக்களவை தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே இருக்கும் நிலையில் அரசியல் காட்சிகள் கூட்டணி பங்கீடுகளில் இறுதிக்கட்ட நிலையில் இருக்கிறது

ஏற்கனவே நடந்த பேச்சுவார்த்தையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் 9 லோக்சபா தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு எந்தெந்த தொகுதிகள் என்பது தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி திருவள்ளூர் (தனி), கடலூர், மயிலாடுதுறை, சிவகங்கை, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, கரூர், விருதுநகர், கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரி ஆகிய 10 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டி.

கடந்த முறை காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்ற திருச்சி தொகுதி இந்த முறை கொடுக்கப்படவில்லை. மேலும் கடந்த 2019ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட திருச்சி, ஆரணி, தேனி தொகுதிகளுக்கு பதிலாக கடலூர், மயிலாடுதுறை, திருநெல்வேலி தொகுதிகள் புதிதாக வழங்கப்பட்டு இருக்கிறது.

Kathir

Next Post

Movie | மக்களவை தேர்தலால் திரைப்படங்களை தியேட்டர்களில் ரிலீஸ் செய்வதில் சிக்கல்..!! திரையுலகினர் அதிர்ச்சி..!!

Mon Mar 18 , 2024
மக்களவை தேதி பற்றிய அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் நேற்று முன் தினம் வெளியிட்டது. அதன்படி, ஏப்ரல் 19 முதல் ஜூன் வரை 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. தமிழகத்தை பொறுத்த வரை முதல் கட்டத்திலேயே அதாவது ஏப்ரல் 19ஆம் தேதியே ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழ் சினிமா வெளியீட்டை பொறுத்த வரை தீபாவளி, பொங்கலுக்கு அடுத்த படியாக தமிழ் புத்தாண்டு நாள் முக்கியமான வெளியீட்டு தேதியாகும். […]

You May Like