fbpx

தீர்வு கிடைக்காத 10 முக்கிய பிரச்சனைகள்..! MLA-க்களுக்கு முதல்வர் முக.ஸ்டாலின் திடீர் உத்தரவு..!

சட்டமன்ற தொகுதிகளில் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாத 10 முக்கிய பிரச்சனைகளை எம்.எல்.ஏக்கள் அனுப்பி வைக்க வேண்டும் என முதலமைச்சர் முக.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம் விரிவுபடுத்தப்படுவது குறித்த முக்கியமான அறிவிப்பிளை முதலமைச்சர் முக.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார். இதற்காக இந்த ஆண்டே 1000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் தெரிவித்திருந்தார். அதன்படி, தங்கள் தொகுதியில் நீண்ட நாட்களாகத் தீர்க்கப்படாமல் உள்ள 10 முக்கியமான கோரிக்கைகளை முன்னுரிமைப்படுத்தி அடுத்த 15 நாட்களுக்குள் மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்குப் பரிந்துரைப் பட்டியலை அனுப்பி வைக்குமாறு அனைத்துச் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

தீர்வு கிடைக்காத 10 முக்கிய பிரச்சனைகள்..! MLA-க்களுக்கு முதல்வர் முக.ஸ்டாலின் திடீர் உத்தரவு..!

மேலும், சட்டமன்ற உறுப்பினராகிய நாம் ஒவ்வொருவரும் நமது தொகுதியின் வளர்ச்சியிலும், மேம்பாட்டிலும் நமது பங்களிப்பினை ஆற்றுவதில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளோம். அந்த வகையில், மக்களின் தேவைகளை நன்கு உணர்ந்து அவற்றை நிறைவேற்றும் பெரும் பொறுப்பு அவர்களது பிரதிநிதிகளாக விளங்கும் சட்டமன்ற உறுப்பினர்களாகிய நமக்கு உள்ளது. குறிப்பாக, சில தேவைகள் மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்தும் நடைமுறையில் உள்ள திட்டங்களின் மூலம் அவற்றைச் செயல்படுத்திட இயலாத நிலை இருக்கலாம். எனவே, தொகுதிகளில் பல ஆண்டுகளாக நிறைவேறாத மக்களின் தேவைகளை நிறைவேற்ற முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.

Chella

Next Post

போலீஸ் அடி இப்படித்தான் இருக்குமோ..? படுக்க வைத்து முகத்தில் குத்துவிடும் காவல்துறை அதிகாரிகள்..!

Tue Aug 23 , 2022
அமெரிக்காவில் ஆர்கன்சாஸ் காவல்துறை அதிகாரிகள் 3 பேர் சேர்ந்து ஒருவரை சரமாரியாக தாக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் ஆர்கன்சாஸ் என்ற இடத்தில் க்ராஃபோர்ட் (Crawford) கவுண்டி பகுதியில் சந்தேகப்படும்படியாக நடந்து கொண்டதாகக் கூறி ஒருவரை 3 காவல் அதிகாரிகள் சேர்ந்து காட்டுத்தணமாக தாக்கியுள்ளனர். அவரது தலையில் பலமுறை குத்தி, அவரை தரையில் மண்டியிடச் செய்துள்ளனர். இந்த சம்பவத்தை அப்பகுதியில் இருந்த ஒருவர் செல்போனில் வீடியோவாக […]
போலீஸ் அடி இப்படித்தான் இருக்குமோ..? படுக்க வைத்து முகத்தில் குத்துவிடும் காவல்துறை அதிகாரிகள்..!

You May Like