இத்தாலி நாட்டில் நேற்று பெய்த கனமழையால் 10 பேர் பலியாகி உள்ளனர்.
இததாலியில் மிக பயங்கரமான இடி மின்னலுடன் பெய்த கன மழைக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் மரங்கள், இருசக்கர வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன. 8 வயது சிறுவன் உள்பட 4 பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகின்றது. சிலர் தப்பித்தோம் , பிழைத்தோம் என உயிர் பிழைத்துள்ளனர்.
இதில் பெண்மணி ஒருவர் தன் கையில் குழந்தையுடன் இருந்துள்ளார். பெரு வெள்ளத்தில் கையில் இருந்த குழந்தை ஆற்றுடன்அடித்துச் செல்லப்பட்ட நிகழ்வு அங்கிருந்தவர்களின் மனதை நொறுங்கச் செய்தது. சிலர் மரங்களின் மீது ஏறி நின்று உயிர் பிழைத்துள்ளனர். பத்துக்கும் மேற்பட்டோர் வீட்டின் மாடிகளில் ஏறிச் சென்று உயிர் பிழைத்தனர்.
இந்த ஆண்டு இத்தாலியில் வரலாறு காணாத மழை பதிவாகியுள்ளது. வெயில் காலத்திலும் வராலாறு காணாத வெயில் சுட்டெரித்தது. இந்நிலையில் மழையும் வெளுத்துவாங்கியுள்ளது. இதனால் விவசாயம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தேசிய வானிலை ஆராய்ச்சி மையம் கூறுகையில் , கடந்த ஆகஸ்டில் சுட்டரெித்த வெயில் கடந்த 1800ம் ஆண்டு பதிவாகி உள்ளது. நிலச்சரிவு ஏற்பட்டும் 11 பேர் உயிரிழந்துள்ளனர். 8 பேர் காயம் அடைந்துள்ளதாக அந்நாட்டு செய்திகளில் தகவல் வெளியாகி உள்ளது.