fbpx

10 துண்டுகள்..!! சமையலறை முழுவதும் ரத்தம்..!! மறைந்திருந்த உடல் பாகங்கள்..!! திக் திக் சம்பவம்..!!

அத்தையை கொடூரமாக கொலை செய்து 10 துண்டுகளாக வெட்டி அதனை, சமையலறையில் மறைத்து வைத்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள வித்யாதர் நகரில் சரோஜ் என்பவர் வசித்து வந்தார். இவருடைய கணவர் கடந்த 27 வருடங்களுக்கு முன் இறந்து விட்டார். இவரது இரண்டு மகள்களுக்கும் திருமணம் ஆகிவிட்டது. இந்நிலையில், கடந்த 11ஆம் தேதியன்று இளைஞர் அனுஜ், தன் அத்தையான சரோஜை கொடூரமாக கொலை செய்து 10 துண்டாக வெட்டி சமையலறையில் மறைத்து வைத்து உள்ளார். இதையடுத்து ஆள்நடமாட்டம் இல்லாத நேரத்தில் அருகில் உள்ள காட்டுப் பகுதிக்கு சென்று துண்டாக வெட்டிய உடல் உறுப்புகளை அப்புறப்படுத்தி வந்துள்ளார்.

10 துண்டுகள்..!! சமையலறை முழுவதும் ரத்தம்..!! மறைந்திருந்த உடல் பாகங்கள்..!! திக் திக் சம்பவம்..!!

இதையடுத்து சரோஜின் மகளான பூஜாவிடம், “அம்மாவை காணவில்லை என்றும் இதனால் போலீஸ் நிலையத்தில் புகாரளித்துள்ளதாகவும்” அனுஜ் கூறினார். இதை கேட்டு அதிர்ந்துபோன பூஜா, அனுஜ் கூறியதை உண்மை என நம்பவில்லை. இதற்கிடையே, கடந்த 13ஆம் தேதியன்று பூஜா அனுஜின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அனுஜ் தன் சமையலறையிலிருந்த ரத்தத்தை சுத்தம் செய்து உள்ளார். இதனை பார்த்த பூஜா, எப்படி இங்கு ரத்தம் வந்தது என கேட்டுள்ளார். இதற்கு பதில் அளித்த அனுஜ், தன் மூக்கில் இருந்து ரத்தல் கசிவதாக கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். இதன் காரணமாக சந்தேகமடைந்த பூஜா இது பற்றி தன் சகோதரியிடம் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து இருவரும் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதன்படி, சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், வீட்டை சோதனை செய்ததில் அனுஜ் கொலை செய்தது உறுதியானது. அதன்பின் காவல்துறையினர் அனுஜை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Chella

Next Post

அலெர்ட் கொடுத்த வானிலை மையம்..!! இந்த தேதிகளில் கன்ஃபார்ம்..!! மக்களே தயாரா இருங்க..!!

Mon Dec 19 , 2022
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் 21, 22ஆம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி, இலங்கை கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என்பதால் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் 21ஆம் தேதி தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டங்களிலும், காரைக்காலிலும் […]

You May Like