fbpx

10 ரேடார் கருவிகள் மூலம் புயல் நகர்வு கண்காணிப்பு!… சென்னையை சூழ்ந்தவாறு ஆந்திராவுக்கு நகர்கிறது!

தமிழகத்தின் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களை சூழ்ந்தவாறு ஆந்திராவுக்கு நகர்ந்து செல்லும் மிக்ஜாம் புயலின் ஒவ்வொரு நகர்வையும் 10 ரேடார் கருவிகள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதாக இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வங்கக்கடலில் அந்தமான் அருகில் உருவான, ‘மிக்ஜாம்’ புயல், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட வடக்கு கடலோர மாவட்டங்களை சூழ்ந்தவாறு, ஆந்திராவுக்கு நகர உள்ளது. அதனால், கடலோர மாவட்டங்களில், தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சென்னை துறைமுகம் மற்றும் பள்ளிக்கரணையில் செயல்படும், ‘எஸ் பேண்ட்’ மற்றும் ‘எக்ஸ் பேண்ட்’ ரேடார்கள்; ஸ்ரீஹரிகோட்டா, காரைக்கால், மசூலிப்பட்டினம், விசாகப்பட்டினம், கோபால்புர் மற்றும் பாராதீப் ஆகிய இடங்களில் உள்ள ரேடார்கள், வங்கக்கடலில் சுழன்று வரும் மிக்ஜாம் புயலின் மாற்றங்களை கண்காணித்து வருகின்றன.

ஒவ்வொரு எல்லைக்குள்ளும் புயல் வரும்போதும், ஒவ்வொரு ரேடாரில் இருந்து சிக்னல்கள் மற்றும் தரவுகள் கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மிக்ஜாம் புயலின் மையப் பகுதி, வெளிப் பகுதி, அதற்கு முன், பின்னணியில், இந்திய பெருங்கடல் மற்றும் அரபிக் கடலிலும், நிலப் பகுதியிலும் ஏற்படும் மாற்றங்களை கண்காணித்து வருகின்றன. இதற்காக, சென்னை வானிலை ஆய்வு மையத்துடன், கோல்கட்டா, ஹைதராபாத், விசாகப்பட்டினம், பெங்களூரு, திருவனந்தபுரம், அமராவதி ஆகிய வானிலை ஆய்வு மையங்கள் அடங்கிய குழுக்களும், தரவுகளை சேகரித்து வருகின்றன.

இதுகுறித்து, இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது: இந்திய வானிலை ஆய்வு மையத்தின், அனைத்து ரேடார்களும் சிறப்பான நிலையில் செயல்படுகின்றன. தற்போது, ஸ்ரீஹரிகோட்டா, சென்னை துறைமுகம், பள்ளிக்கரணை, காரைக்கால் மற்றும் மசூலிப்பட்டினம் ஆகிய இடங்களின் ரேடார்களில் இருந்து, 24 மணி நேர கண்காணிப்பு தரவுகள் பெறப்படுகின்றன. வானிலை ஆய்வு மையத்தின் சென்னை அலுவலகத்தில், சிறப்பு குழு அமைக்கப்பட்டு, அத்தியாவசிய அரசு துறைகளுக்கு 24 மணி நேர கண்காணிப்பு தரவுகள், தகவல்கள், முன்னெச்சரிக்கை அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகின்றன என்று அவர் கூறினார்.

Kokila

Next Post

அட இப்படியெல்லாமா சாப்பிடுவாங்க!... பன்றியின் ரத்தம், குடலில் வெரைட்டி ரைஸ்!… வயிறு சம்பந்த பிரச்சனைகளை தீர்க்கும் தவளை கால்!

Sun Dec 3 , 2023
இந்திய கலாச்சாரம் குறித்து பேசும் போது அதன் உணவுப் பழக்கத்தை தவிர்த்துவிட்டு பேச முடியாது. ஜம்மு முதல் கன்னியாக்குமரி வரை ஒவ்வொரு மாநிலத்துக்கும், பிராந்தியத்துக்கும் உணவுப் பழக்கம் என்பது மாறுபடுகிறது. ஏன் தமிழகத்துக்கு உள்ளேயே பல வகை உணவுப் பழக்கங்கள் இருப்பதை நாம் பார்க்க முடிகிறது. அட இப்படியெல்லாமா சாப்பிடுவாங்க என ஆச்சரியப்பட வைக்கும் இந்திய உணவுப் பழக்கங்களில் வித்தியாசமான சிலவற்றை நாம் காணலாம். கூட்டுப்புழு கூட்டு முதல் குட்டி […]

You May Like