1.4 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் இந்தியாவில், விருப்பப்படி பொருட்களை வாங்க போதுமான வருமானம் இல்லாத கிட்டத்தட்ட 1 பில்லியன் தனிநபர்கள் (100 கோடி) உள்ளனர் என்று துணிகர மூலதன நிறுவனமான ப்ளூம் வென்ச்சர்ஸ் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
அதாவது நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 90% பேரால் விரும்பிய பொருட்களை வாங்க முடிவதில்லை. மறுபுறம் மீதமுள்ள 10 சதவீதம் பேர் மட்டுமே நாட்டில் நுகர்வு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 10% என்பது ஒட்டுமொத்த மெக்சிகோ மக்கள் தொகைக்கு இணையானதாகும்
ஆசியாவின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக உள்ள இந்தியாவில் நுகர்வோர் சந்தை பரவலாக விரிவடையவில்லை, மாறாக ஆழமடைந்து வருவதாக அறிக்கை எடுத்துக்காட்டுகிறது. அதாவது பணக்காரர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை.. ஏற்கனவே பணக்காரர்களாக உள்ளவர்களின் சொத்து மட்டுமே அதிகரிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றுநோய்க்குப் பிறகு இந்தியாவின் பொருளாதார மீட்சி “கே-வடிவத்தில்” உள்ளது என்ற கருத்தை இந்த ஆராய்சி ஆதரிக்கின்றன. ஏழைகள் குறைந்து வரும் வாங்கும் சக்தியுடன் போராடும் அதே வேளையில் பணக்காரர்கள் தொடர்ந்து செழித்து வளர்கிறார்கள்.
தரவுகளின்படி, இந்தியர்களில் மேல்மட்ட 10 சதவீதத்தினர் இப்போது தேசிய வருமானத்தில் 57.7 சதவீதத்தை வைத்திருக்கிறார்கள், இது 1990 இல் 34 சதவீதமாக இருந்தது, அதே நேரத்தில் கீழ்மட்டப் பாதியினரின் பங்கு 22.2 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாகக் குறைந்துள்ளது. அதேபோல மேலும் 30 கோடி பேரை எமர்ஜிங் கன்ஸ்யூமர்கள் (emerging consumers) என வகைப்படுத்தியுள்ளனர். இவர்கள் தற்போது தான் அதிகமாகச் செலவு செய்யத் தொடங்கினர். அதேநேரம் தங்கள் செலவுகளில் எச்சரிக்கையாக இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவின் தாக்கம் : 2025 ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை, செயற்கை நுண்ணறிவின் தாக்கம் குறித்த எச்சரிக்கையை எதிரொலித்தது. செயற்கை நுண்ணறிவு உற்பத்தித்திறனை அதிகரிக்கும் அதே வேளையில், அது இந்தியாவின் உழைப்பு மிகுந்த பொருளாதாரத்தை சீர்குலைக்கும் என்று கணக்கெடுப்பு எச்சரித்தது. விரைவான மாற்றம், செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் இலாபங்களுக்கு வரி விதிப்பது உட்பட கொள்கை தலையீட்டிற்கான கோரிக்கைகளைத் தூண்டக்கூடும், இது வளர்ச்சியைப் பாதிக்கக்கூடும் என்று IMF எச்சரிக்கிறது.
அரசாங்கம், தனியார் துறை மற்றும் கல்வித்துறை இடையேயான ஒத்துழைப்பை வலியுறுத்தி, உள்ளடக்கிய ஆதாயங்களை உறுதி செய்வதற்கு சமநிலையான அணுகுமுறையை அறிக்கை கோரியது. வேலைகளில் AI இன் தாக்கம் நிச்சயமற்றதாக இருந்தாலும், மெத்தனப் போக்கு இந்தியாவிற்கு விலை உயர்ந்ததாக இருக்கும் என்றும் அது வலியுறுத்தியது
Read more:Gold Rate | தொடர் சரிவில் தங்கம் விலை.. நகை வாங்க பெஸ்ட் டைம்.. இன்றைய ரேட் என்ன தெரியுமா?