வருவாய் புலனாய்வு இயக்குனரகம் (டிஆர்ஐ) இந்தியாவை தளமாகக் கொண்டு செயல்படும் ஒரு பெரிய சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலை கைது செய்தனர்.
வருவாய் புலனாய்வு இயக்குனரத்தின் கூற்றுப்படி, இந்தியாவில் போதைப்பொருள் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த ஒரு பெரிய வெற்றியாக, டிஆர்ஐ அதிகாரிகள் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலை முறியடித்தனர். சுமார் 100 கோடி மதிப்புள்ள சட்டவிரோத சந்தை மதிப்பு கொண்ட 9.829 கிலோ கோகைனை அதிகாரிகள் கைப்பற்றியதாகவும், எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபாவில் இருந்து இந்தியாவுக்கு கடத்தும் நோக்கத்துடன் இந்தோனேசிய மற்றும் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த இரண்டு பெண் பயணிகளை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு போதைப் பொருள்
ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மலேசியா போன்ற வெளிநாடுகளுக்கு ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கடத்திய வழக்கில் திமுகவை சேர்ந்த ஜாபர் சாதிக் கடந்த 9-ம் தேதி கைது செய்யப்பட்டார். அவரை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு காவல்துறை அதிகாரிகள், டெல்லி காவற்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.இந்த வழக்கில் ஏற்கனவே 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் முக்கிய குற்றவாளியான ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
டெல்லி சிறையில் இருந்த ஜாபர் சாதிக்கை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வந்தனர். சென்னையில் அவருக்கு சொந்தமான பல இடங்களில் தீவிர சோதனையானது மேற்கொண்டு வருகின்றனர். வாடகைக்கு வீடு எடுத்து போதை பொருட்களை தயாரித்து வந்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.