fbpx

கூலித்தொழிலாளியின் வங்கிக் கணக்கில் ரூ.100 கோடி..!! வங்கி அதிகாரிகள் ஷாக்..!! நடந்தது என்ன..?

மேற்குவங்க மாநிலம் முர்ஷிதாபாத் பகுதியில் பாசுதேப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முகமது நசிருல்லா மண்டல். கூலித் தொழிலாளியான இவரது வங்கிக் கணக்கில் ரூ.100 கோடி டெபாசிட் ஆகியுள்ளது. இதனால், முகமதுவின் வங்கிக் கணக்கு தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, அவரது வீட்டு வசாலிலும் இதுகுறித்து சைபர் செல் துறையினர் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இதைபார்த்த பின்பு தான் தனது வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருப்பது முகமதுக்கு தெரியவந்தது.

இதையடுத்து, வங்கிக் கணக்கில் திடீரென பணம் சேர்ந்தது குறித்து விசாரணைக்காக வருகிற 30ஆம் தேதிக்குள் ஆஜராகும்படி முகமதுவுக்கு தேகானா சைபர் செல் சம்மன் அனுப்பியுள்ளது. இது தொடர்பாக முகமது நசிருல்லா கூறுகையில், ”காவல்துறையினரிடம் இருந்து அழைப்பு வந்ததும் எனக்கு தூக்கம் வரவில்லை. நான் என்ன தவறு செய்தேன். எனக்கு எதுவும் தெரியவில்லை. எனது வங்கிக் கணக்கில் ரூ.100 கோடி இருப்பதை என்னால் நம்ப முடியவில்லை. அது உண்மை தானா? என்று நான் பலமுறை மறுபரிசீலனை செய்தேன்.

கணக்கு பரிவர்த்தனை குறித்து விசாரிப்பதற்காக சம்பந்தப்பட்ட வங்கி கிளைக்கு கணக்கு புத்தகத்துடன் சென்றேன். அங்கு, வங்கிக் கணக்கு முடக்குவதற்கு முன்பு ரூ.17 இருந்ததாக கூறப்பட்டது. வங்கிக் கணக்கில் வெறும் ரூ.17 வைத்திருந்த நிலையில் கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு வங்கி கணக்கு நிறைந்துள்ளது” என்றுத் தெரிவித்துள்ளார்.

Chella

Next Post

தீயாய் பரவும் புதிய வகை கொரோனா வைரஸ்..!! வாரத்திற்கு கோடிக்கணக்கானோர் பாதிப்பு..? பீதியில் மக்கள்..!!

Fri May 26 , 2023
புதிய வகை கொரோனாவால் வாரத்திற்கு கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே ஆட்டிப் படைத்தது. சீனாவில் தொடங்கினாலும் மற்ற நாடுகளில் பெரிய பாதிப்பு ஏற்பட்டதே தவிர, சீனாவில் அந்த அளவுக்கு பாதிப்பு இல்லை. தங்கள் நாட்டில் வைரஸை கட்டுப்படுத்திவிட்டதாக சீனா கூறியது. ஆனால், சீனா உண்மையை மறைப்பதாக உலக நாடுகள் குற்றம்சாட்டின. இந்நிலையில், சீனாவுக்கு மீண்டும் ஆபத்து ஏற்பட இருப்பதாக […]

You May Like