fbpx

ரூ.100 கோடிகளை வாரிக்குவித்த ’தங்கலான்’..!! படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் தங்கலான். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தப் படம், தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியானது. செப்டம்பர் 6ஆம் தேதி முதல் இந்தியிலும் ரிலீஸ் ஆகவுள்ளது. படம் வெளியாகி இரண்டு வாரங்கள் முழுமையாக முடிந்துள்ள நிலையில், படத்தின் வசூல் தொடர்பாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

படம் முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.26.44 கோடிகளை வசூல் செய்தது. இதனை படக்குழுவே தெரிவித்தது. மேலும், 2024ஆம் ஆண்டில் இதுவரை வெளியான தமிழ் படங்களில் முதல் நாளில் அதிக வசூலைக் குவித்த படமாக தங்கலான் உள்ளது. இந்நிலையில், அடுத்த 2 நாளில் ரூ.27.20 கோடிகளை வசூல் செய்தது. இதன் மூலம் படம் முதல் 3 நாட்களில் ரூ.53.64 கோடிகளை வசூல் செய்தது என படக்குழுவே தெரிவித்தது.

இந்நிலையில், இன்று ஆகஸ்ட் 30ஆம் தேதி அதாவது படம் ரிலீஸ் ஆகி 16 நாட்களுக்குப் பின்னர் படம் ரூ.100 கோடிகளை தியேட்டரில் மட்டும் வசூல் செய்துள்ளது. அடுத்தவாரம் ஹிந்தியில் ரிலீஸ் ஆகவுள்ளது. இங்கும் நல்ல வசூல் கிடைக்கும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது. ஏற்கனவே படத்தின் ஓடிடி உரிமத்தை நல்ல விலைக்கு விற்று விட்டதால், தயாரிப்பாளரும் தங்கலான் ஒட்டுமொத்த குழுவும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

Read More : பெண்களே..!! சுயதொழில் தொடங்க போறீங்களா..? தமிழ்நாடு அரசின் இந்த திட்டத்தை மிஸ் பண்ணிடாதீங்க..!!

English Summary

Official announcement from the film team that the film Tangalan has collected Rs.100 crores

Chella

Next Post

’அந்த பெண்ணுக்கு ஏமாற்றும் எண்ணம் இல்லை’..!! ’கடைசி நேரத்தில் ட்விஸ்ட்’..!! வழக்கை ரத்து செய்த நீதிபதிகள்..!!

Fri Aug 30 , 2024
It cannot be considered a crime to have the courage not to tell her parents about her relationship with her boyfriend.

You May Like