fbpx

100 நாள் வேலை திட்டம்..!! உங்களை ஏமாத்துறாங்களா..? இனி நீங்களே நிலுவைத்தொகையை பார்க்கலாம்..!!

திமுக துணைப் பொதுச்செயலாளரும், மக்களவை திமுக துணைத் தலைவருமான கனிமொழி எம்.பி. நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்வியில், “நாடு முழுவதும் செயல்படுத்தப்படும் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் (100 நாள் வேலைத் திட்டம்) பயனாளிகளுக்கு வழங்க வேண்டிய ஊதிய நிலுவைத் தொகை மற்றும் இத்திட்டத்திற்கான உபகரணங்களுக்கான நிலுவைத் தொகை ஒவ்வொரு மாநில வாரியாக விவரம் தேவை உள்ளிட்ட கேள்விகளை முன்வைத்திருந்தார்.

இதற்கு மத்திய ஊரக வளர்ச்சித் துறை இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி அளித்துள்ள பதிலில், “100 நாள் வேலைத்திட்டம் என்பது அந்தந்த பகுதிகளில் தேவைக்கேற்ப செயல்படுத்தப்பட்டு வரும் திட்டமாகும். இத்திட்டத்துக்காக ஒன்றிய அரசு ஊதிய நிதியையும், உபகரணங்களுக்கான நிதியையும், நிர்வாக நிதியையும் மாநில அரசுகளுக்கு ஒதுக்குகிறது. மாநில அரசுகள் மூலமாக மாவட்ட நிர்வாகங்களுக்கு நிதி செல்கிறது.

மாவட்டங்களுக்கு நேரடியாக மத்திய அரசு நிதி ஒதுக்குவதில்லை. 2023 அக்டோபர் மாதப்படி ஒதுக்கப்பட்ட நிதி இன்னும் முழுமையாக செலவிடப்படவில்லை. நவம்பர் 29, 2023 வரையிலான இத்திட்டத்துக்கான நிலுவையில் இருக்கும் நிதி பற்றிய மாநில வாரியான விவரங்கள் அரசிடம் உள்ளன. அதன்படி, தமிழ்நாட்டுக்கு இத்திட்டத்துக்கான ஊதிய நிலுவைத் தொகை 261 கோடியே 85 லட்சத்து 91 ஆயிரம் ரூபாயாக இருக்கிறது. தமிழ்நாட்டுக்கான உபகரண நிலுவைத் தொகை (material funds) 106 கோடியே 22 லட்சத்து 48 ஆயிரம் ரூபாயாக இருக்கிறது.

மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பயனாளிகள் பணியாற்றிய 15 நாட்களுக்குள் ஊதியம் பெற தகுதி பெற்றவர்கள். இத்திட்டத்தில் பணியாற்றுபவர் தனக்கு சேர வேண்டிய ஊதிய நிலுவைத் தொகை எவ்வளவு இருக்கிறது என்பதை சம்பந்தப்பட்ட கிராமப் பஞ்சாயத்து அலுவலகத்தில் இதற்கென வைக்கப்பட்டிருக்கும் பதிவேட்டு அறிக்கை மூலமாக தெரிந்து கொள்ளலாம்” என்று பதிலளித்துள்ளார்.

Chella

Next Post

”என்னால முடியலடா நான் போறேன்”..!! பிக்பாஸ் வீட்டில் சுவர் ஏறி குதித்து தப்ப முயன்ற கூல் சுரேஷ்..!! பரபரப்பு..!!

Wed Dec 13 , 2023
பிக்பாஸ் 7-வது சீசன் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசன் 70 நாட்களைக் கடந்து இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. தற்போது 13 போட்டியாளர்கள் எஞ்சி உள்ளதால், அவர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதில் கடந்த வாரம் எவிக்‌ஷன் நடக்காததால் இந்த வாரம் டபுள் எவிக்‌ஷன் இருக்கவும் வாய்ப்புள்ளது. இந்த சீசனில் நடிகர் கூல் சுரேஷும் ஒரு போட்டியாளராக கலந்துகொண்டுள்ளார். இவர் 10 வாரங்களாக எவிக்‌ஷனில் இருந்து […]

You May Like