Heat: தமிழகத்தில் கோடை வெப்பம் தனது வேலையை காட்டத் தொடங்கியுள்ளது. அந்தவகையில், ஈரோடு, பரமத்தி வேலூரில் நேற்று 100 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த பிப்ரவரி மாதமே வெயில் தலைகாட்டத் தொடங்கிவிட்டது. சென்னையில் அதிகாலை நேரங்களில் பனியும், பகலில் வெயிலும் மாறி மாறி வருவதால் நோய் தாக்குதலும் ஏற்படுகிறது.இந்தியாவில் இந்த ஆண்டு கோடை வெயில் இயல்பை விட அதிகமாக இருக்கும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது. அதுபோல கோடை காலம் ஆரம்பமே அடித்து ஆடுகிறது. பல இடங்களில் வெப்பம் 100 டிகிரி வரை பதிவாகியுள்ளது.
அந்தவகையில் ஈரோடு மற்றும் பரமத்தி வேலூரில் நேற்றைய அதிகபட்ச வெப்ப பதிவு 100 டிகிரி பாரன்ஹீட்டை தொட்டது. அதாவது ஈரோட்டில் 102.2, பரமத்தி வேலூரில் 100.4 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. இதுபோல் மாநிலத்தில் பல நகரங்களில் வெயில் கொளுத்த தொடங்கியுள்ளது. வெயில் காலங்களில் அதிக அளவில் பருத்தி ஆடைகளை அணிய வேண்டும் என்றும், செயற்கை குளிர்பானங்களை தவிர்த்து இயற்கை குளிர் பானங்களை அருந்த வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
Readmore:தமிழகத்தில் அதிர்ச்சி!… 4 மாவட்டங்களில் 4027 பெண்களுக்கு புற்றுநோய்!… பொது சுகாதாரத்துறை இயக்குநர்!