fbpx

’100% நிவாரண உதவிகள் சென்றடைய வேண்டும்’..!! அதிகாரிகளுக்கு முதல்வர் முக.ஸ்டாலின் உத்தரவு..!!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் தற்போதைய கள நிலவரம் குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அரசின் நிவாரண உதவிகள் 100 சதவீதம் பொதுமக்களை சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 16, 17ஆம் தேதி பெய்த கனமழை தென் தமிழகத்தை புரட்டிப் போட்டது. மக்கள் தங்கள் வீடுகளை இழந்து முகாம்களில் அடைக்கலம் புகும் அளவிற்கு அவர்களது வாழ்க்கையை புரட்டிப் போட்டது. தற்போது வரை அங்கு மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி – நெல்லை – கன்னியாகுமரி – தென்காசி மாவட்டங்களில் நிவாரணப் பணிகளை மேற்கொள்வது தொடர்பாக முதலமைச்சர் முக.ஸ்டாலின் தலைமையில் உயர்நிலை ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் தற்போதைய கள நிலவரத்துக்கு ஏற்ப பல்வேறு ஆலோசனைகளை முதல்வர் வழங்கியதாகவும், அரசின் நிவாரண உதவிகள் 100 சதவீதம் பொதுமக்களை சென்றடைவதை உறுதி செய்ய அறிவுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Chella

Next Post

விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் தொடங்கியது..!! தொண்டர்கள், ரசிகர்கள் மீது போலீசார் தடியடி..!!

Fri Dec 29 , 2023
கேப்டன் விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் சென்னை தீவுத்திடலில் இருந்து தொடங்கியது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஊர்தியில் விஜயகாந்தின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. இறுதி ஊர்வலத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டுள்ளனர். கோயம்பேட்டிலும் ஏராளமான தொண்டர்கள், ரசிகர்கள் குவிந்துள்ளனர். கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் மாலை 4.45 மணியளவில் இறுதிச் சடங்கு நடைபெறவுள்ளது. 72 துப்பாகி குண்டுகள் முழங்க, முழு அரசு மரியாதையுடன் கேப்டன் விஜயகாந்த்தின் உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. ஆனால், […]

You May Like