fbpx

இந்தியாவில் 10 ஆண்டுகளில் 1,000 புலிகள் இறந்துள்ளன.. அதிகபட்ச இறப்பு எந்த மாநிலத்தில்..?

புலிகளை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஜூலை 29ஆம் தேதி உலகம் முழுவதும் இன்று சர்வதேச புலிகள் தினமாக அனுசரிக்கப்படும் நிலையில், 2012ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் இதுவரை 1,059 புலிகள் உயிரிழந்துள்ளதாக அரசின் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டின் ‘புலி மாநிலம்’ என்று அழைக்கப்படும் மத்தியப் பிரதேசம் அதிக எண்ணிக்கையிலான இறப்புகளைப் பதிவுசெய்துள்ளது.

தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் (NTCA) கூற்றுப்படி, இந்த ஆண்டு இதுவரை 75 புலிகள் இறந்துள்ளன, கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 127-ஆக இருந்தது.. இது 2012-2022 காலகட்டத்தில் அதிகபட்சமாக இருந்தது. 2020ல் 106 புலிகள் இறந்துள்ளன; 2019 இல் 96; 2018 இல் 101; 2017 இல் 117; 2016 இல் 121; 2015 இல் 82; 2014 இல் 78; 2013ல் 68 மற்றும் 2012ல் 88 புலிகள் இறந்துவிட்டன..

மாநில வாரியான புள்ளிவிவரங்கள்:

  • ஆறு புலிகள் காப்பகங்களைக் கொண்ட மத்தியப் பிரதேசம், கடந்த 10 ஆண்டுகளில் அதிகபட்சமாக (270) இறப்புகளைப் பதிவு செய்துள்ளது.
  • ம.பி.க்கு அடுத்தபடியாக மகாராஷ்டிரா (183), கர்நாடகா (150), உத்தரகாண்ட் (96), அசாம் (72), தமிழ்நாடு (66), உத்தரபிரதேசம் (56), கேரளா (55) ஆகிய மாநிலங்கள் உள்ளன.
  • ராஜஸ்தான், பீகார், மேற்கு வங்கம், சத்தீஸ்கர் மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் முறையே 25, 17, 13, 11 மற்றும் 11 புலிகள் இறந்துள்ளன.
  • மத்தியப் பிரதேசத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 68 புலிகளும், மகாராஷ்டிராவில் இந்த காலகட்டத்தில் 42 புலிகளும் உயிரிழந்துள்ளன.
  • 2018 புலிகள் கணக்கெடுப்பில், மத்தியப் பிரதேசம் 526 புலிகளுடன் இந்தியாவின் ‘புலி மாநிலமாக’ உருவெடுத்தது, அதைத் தொடர்ந்து 524 புலிகளைக் கொண்ட கர்நாடகா 2-வது இடத்தில் உள்ளது..

புலிகள் இறப்பதற்கு வேட்டையாடுதல் முக்கிய காரணம் என்று கருதப்படுகிறது.. தரவுகளின்படி, 2012-2020 காலகட்டத்தில் வேட்டையாடப்பட்டதால் 193 புலிகள் இறந்துள்ளன. ஜனவரி 2021 முதல் வேட்டையாடுதல் காரணமாக இறந்த புலிககளின் எண்ணிக்கை இன்னும் கிடைக்கவில்லை. NTCA இன் கூற்றுப்படி, வேட்டையாடுதல் ஆரம்பத்தில் அனைத்து புலிகளின் மரணத்திற்கும் காரணமாக கருதப்படுகிறது.

பிரேத பரிசோதனை அறிக்கைகள், தடயவியல் மற்றும் ஆய்வக அறிக்கைகள் மற்றும் சூழ்நிலை ஆதாரங்கள் போன்ற கூடுதல் விவரங்கள் ஒரு குறிப்பிட்ட வழக்கை “இயற்கை”, “வேட்டையாடுதல்” அல்லது “இயற்கைக்கு மாறானவை என்பதை தீர்மானிக்க உதவுகின்றனர்.. ஒரு புலி இறப்பை, இயற்கை அல்லது வேட்டையாடுதல் என நிரூபிக்கும் பொறுப்பு அரசைச் சார்ந்தது. ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால், ஆதாரங்கள் இருந்தபோதிலும், வேட்டையாடுதல் மரணத்திற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

Maha

Next Post

"சூப்பர் நியூஸ்" தமிழகம் முழுவதும் 534 கிராமங்களில் 4G மொபைல் சேவை...! மத்திய அரசிடம் இருந்து வெளியான அறிவிப்பு...!

Fri Jul 29 , 2022
தமிழ்நாட்டில் 534 கிராமங்களிலும், புதுச்சேரியில் 1 கிராமத்திலும் 4ஜி மொபைல் சேவை வழங்கப்பட உள்ளது. நாட்டில் 4ஜி மொபைல் சேவை இல்லாத கிராமங்களில் ரூ.26,316 கோடி மதிப்பில் அதனை முழுமையாக வழங்குவதற்கான திட்டத்திற்கு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் மட்டும் 534 கிராமங்களிலும், புதுச்சேரி 1 கிராமத்திலும் 4ஜி மொபைல் சேவை அளிக்கப்பட உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு […]

You May Like