fbpx

1000 ஆண்டு பழமையான ஸ்ரீவில்லிபுத்தூர் வைத்தியநாத சுவாமி கோயில்.. இத்தனை சிறப்புகளா..?

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார் வளாகத்தில் வைத்தியநாத சுவாமி கோவில் உள்ளது. இது 1000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழமை வாய்ந்த கோவிலாகும். மதுரையை ஆண்ட மன்னர் திருமலை நாயக்கர் சூளைநோயால் அவதியுற்ற போது, இக்கோவிலின் வைத்தியநாதரை வழிபட்டு சூளைநோய் நீங்கப்பெற்றார்.

மிகப்பெரும் சைவத்தலமான இக்கோயில் அருள்மிகு வைத்தியநாத சுவாமி திருக்கோயில் என்று அழைக்கப்பட்டு வருகிறது. விருதுநகர் மாவட்டத்திலேயே மிகப்பெரும் சிவ தலமாக இக்கோயில் கருதப்பட்டு வருகிறது. சிவனின் திருவிளையாடல்களில் 24 வகையான திருவிளையாடல்கள் இக்கோயிலில் நடத்தப்பட்டுள்ளது என்பது தனிச் சிறப்பாக இருக்கிறது.

ஐந்து நிலைகளைக் கொண்ட கோபுரம். மூன்று வாயில்கள். வைத்தியநாத சுவாமி மற்றும் சிவகாமி அம்பாள் ஆகியோருக்கு அர்ப்பணிக்கப்பட்ட மூலவர் சன்னதி. விநாயகர், சுப்ரமணியர், துர்க்கை, சண்டிகேஸ்வரி போன்ற பிற தெய்வங்களுக்கும் சன்னதிகள் உள்ளன.

மேலும் ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதம் மூன்று நாட்கள் மட்டும் சூரியன், சிவனை தன் கதிர்களால் வணங்கி செல்கிறது. மேலும் மன்னர் திருமலை நாயக்கர், தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டபோது பல மருந்துகள் எடுத்துக் கொண்டாலும் வயிற்று வலி தீரவில்லை. பின்னர் இக்கோயிலுக்கு வந்து சிவனை மனதார வேண்டி பிரசாதம் அருந்திய பிறகு தீராத வயிற்று வலியும் தீர்ந்துள்ளது. இதனால் வைத்தியநாதசுவாமி கோயிலின் மணியோசை கேட்ட பின்பு தான் மன்னர் திருமலை நாயக்கர் உணவருந்தி வந்துள்ளார் என்று கூறபட்டு வருகிறது.

இதனாலேயே தீராத நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த திருத்தலத்திற்கு வந்து தீர்த்தத்தில் நீராடி வைத்தியநாதசுவாமிக்கு அபிஷேகம் செய்து பரிகாரம் செய்து வந்தால் நோய் உடனே குணமாகும். கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு நீண்ட நாட்களாக அவதியுற்று வருபவர்கள் இக்கோயிலில் அமைந்துள்ள ஜுரஹருக்கு பரிகாரம் செய்து வந்தால் காய்ச்சல் சரியாகும் என்று நம்பப்பட்டு வருகிறது.

Read more : மகா கும்பமேளாவில் 3 வது முறையாக தீ விபத்து.. அலறி ஓடிய பக்தர்கள்.. உ.பி.யில் பரபரப்பு!!

English Summary

1000 year old Srivilliputhur Vaidyanatha Swamy Temple.. So special..?

Next Post

உக்ரைன் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல்!. 9 பேர் பலி!. 13 பேர் படுகாயம்!.

Fri Jan 31 , 2025
Russia drone attack on Ukraine! 9 people died! 13 people were seriously injured!

You May Like