fbpx

கால்நடை மருத்துவப் படிப்புக்கு ஒரே வாரத்தில் 10,000 பேர் விண்ணப்பம்.. கடைசி தேதி எப்போது.. ?

கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு ஒரு வாரத்தில் 10,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்பு (பி.வி.எஸ்சி – ஏ.ஹெச்) மற்றும் நான்கு ஆண்டுகள் கொண்ட உணவுத் தொழில்நுட்பம், பால்வள தொழில்நுட்பம், கோழியின தொழில்நுட்பம் ஆகிய பிடெக் படிப்புகள் உள்ளன.

பி.வி.எஸ்சி. – ஏ.ஹெச் மற்றும் பி.டெக் படிப்புகளுக்கு 2022 – 23 கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் https://adm.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் கடந்த 12ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கியது. வரும் 26-ம் தேதி மாலை 5 மணி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இந்நிலையில் நேற்று மாலை வரை 10,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்

அதேபோல, அயல்நாடு வாழ் இந்தியர், அயல்நாடு வாழ் இந்தியரின் வாரிசுகள், அயல்நாடு வாழ் இந்தியரின் நிதி ஆதரவு பெற்றோர் மற்றும் அயல்நாட்டினருக்கான இடஒதுக்கீட்டு இடங்களுக்கு அக்.14-ம் தேதி மாலை 5 மணி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இந்த படிப்புகளுக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

Maha

Next Post

“ அமித்ஷாவிடம் அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை..” டெல்லியில் இபிஎஸ் பேட்டி..

Tue Sep 20 , 2022
டெல்லியில் இன்று மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசிய எடப்பாடி பழனிசாமி அவரிடம் அரசியல் எதுவும் பேசவில்லை என்று தெரிவித்தார்.. அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 3 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார்.. முன்னாள் அமைச்சர்கள், எஸ்.பி வேலுமணி, சி.வி சண்முகம் ஆகியோரும் அவருடன் சென்றுள்ளனர்.. இன்று காலை டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார்.. இந்த சந்திப்பின் போது, எஸ்.பி வேலுமணி, சி.வி […]
உள்துறை அமைச்சரிடம் எடப்பாடி பழனிசாமி பேசிய முக்கிய விஷயங்கள் என்னென்ன? பரபரப்பு பேட்டி

You May Like