fbpx

1083 காலி பணியிடங்கள்…. புதிய அறிவிப்பை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி!

1083 பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. தேர்வு எழுத விண்ணப்பிபவர்கள் டி.என்.பி.எஸ்.சி இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்கலாம் எனதெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் நிரப்பப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் நடத்தப்பட உள்ள தேர்வுகள் மற்றும் நிரப்பப்பட உள்ள பணியிடங்கள் குறித்த பட்டியல் கடந்த ஆண்டு இறுதியில் வெளியிடப்பட்டது. டிஎன்பிஎஸ்சி சார்பில் நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித் துறை உள்ளிட்ட துறைகளில் இருக்கும் பணி மேற்பார்வையாளர் இளநிலை வரை தொழில் அலுவலர், உள்ளிட்ட 1083 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வுகளுக்கு இன்று முதல் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும், 04.03.2023 தேதி இந்த தேர்வுகளுக்காக விண்ணப்பிப்பதற்கான கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனுடன், இனிய வழி விண்ணப்பங்களை திருத்தம் செய்வதற்கான அவகாசம் 09.03.2023 முதல் 11.09.2023 வரை வழங்கப்பட்டுள்ளது. இந்த காலி பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு தாள் ஒன்று மற்றும் தாள் இரண்டு ஆகியவை காலை மதியம் விதம் 27.05.2023ம் தேதி நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

Kokila

Next Post

இனி வாட்ஸ்அப் Chat, Group-ல் இதை செய்யலாம்... விரைவில் புதிய அம்சம் அறிமுகம்...

Sat Feb 4 , 2023
உலகளவில் அதிக பயனர்களை கொண்ட வாட்ஸ்அப் நிறுவனம் முன்னணி மெசேஜிங் ஆப்-ஆக உள்ளது.. இந்தியாவில் கோடிக்கணக்கான பயனர்களை வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.. வாட்ஸ் அப் நிறுவனம் தனது பயனர்களின் வசதிக்காக பல்வேறு புதிய வசதிகளையும், அப்டேட்களையும் வழங்கி வருகிறது.. அந்த வகையில் விரைவில் ஒரு புதிய அம்சத்தை வாட்ஸ் அப் அறிமுகம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.. பயனர்கள் தங்களின் Chats மற்றும் Whatsapp groups-களுக்குள் செய்திகளைப் பின் செய்யும் […]

You May Like