fbpx

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்றுடன் நிறைவு..!! நாளை முதல் விடுமுறை..!! குஷியில் மாணவர்கள்..!!

தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்றோடு முடிவடைகிறது. 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வானது கடந்த மார்ச் 13ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3ஆம் தேதி முடிவடைந்தது. 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 5ஆம் தேதி முடிவடைந்தது. இதற்கிடையே 11 மற்றும் 12ஆம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தும் பணியானது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அதேபோல், பத்தாம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தும் பணியும் மே 3 ஆம் தேதிக்குள் முடிக்க தேர்வு துறை அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்றுடன் முடிவடைவதால் நாளை முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வை 9 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எழுதி வருகின்றனர். இதுவரை தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் தேர்வுகள் முடிந்துவிட்ட நிலையில், இன்று சமூக அறிவியல் தேர்வுடன் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நிறைவு பெறுகிறது. இதனால், மாணவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Chella

Next Post

டிஎன்பிஎஸ்சி விடைத்தாள்களை திருத்த புதிய தொழில்நுட்பம்..!! அமைச்சர் பிடிஆர் சொன்ன குட் நியூஸ்..!!

Thu Apr 20 , 2023
டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியாவதில் கால தாமதம் ஆகி வருவதை அடுத்து இனி வருங்காலத்தில் AI Automation என்ற தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு பணியாளர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்த நிலையில் இன்னும் அதற்கான தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை. கடந்த ஆண்டு நவம்பர் […]

You May Like