fbpx

SSLC தேர்ச்சி பெற்றவரா நீங்கள்..? சூப்பர் வேலை..!! சம்பளம் எவ்வளவு தெரியுமா..? விண்ணப்பிக்க டைம் இல்ல..!!

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருச்சி அருள்மிகு ஜெம்புகேசுவரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயிலில் காலியாக உள்ள பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணி விவரம் : திருச்சி ஜெம்புகேசுவரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயிலில் காலியாகவுள்ள ஒரு எழுத்தர் பணியிடம் நிரப்பப்பட உள்ளது. 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். 18 வயது நிரம்பியவர்களும், 45 வயதுக்கு உட்பட்டவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

சம்பளம் : தேர்வாகும் நபர்களுக்கு ரூ.10,700 முதல் ரூ.33,700 வரை சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பிப்பது எப்படி..? thiruvanaikavaljambukeswarar.hrce.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பின்னர் அதை பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ்களை இணைக்க வேண்டும். விண்ணப்பத்தில் கட்டாயம், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம் ஒட்டியிருக்க வேண்டும்.

விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய சான்றிதழ்கள் :

* பள்ளி சான்றிதழ் நகல் (பிறந்த தேதியை சரிபார்க்க)

* ஆதார் அட்டை நகல்

* கல்வி சான்று நகல்

* நன்னடத்தை சான்று நகல்

* அனுபவ சான்று நகல்

* இந்து மதத்தை சேர்ந்தவர் என்பதை நிரூபிக்க சாதி சான்றிதழ்

* சுய விலாசிமிட்ட ரூ.25 மதிப்புள்ள அஞ்சல் தலை ஒட்டிய அஞ்சல் உறை ஒன்று ஆகியவற்றை இணைத்து அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 07.09.2024 ஆகும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : உதவி ஆணையர் / செயல் அலுவலர், அருள்மிகு ஜெம்புகேசுவரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயில், திருவானைக்காவல், – 620005. தொலைபேசி எண் : 04312230257.

மேலும் விவரங்களுக்கு www.tnhrce.gov.in மற்றும் thiruvanaikavaljambukeswarar.hrce.tn.gov.in என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.

Read More : ஒலிம்பிக் வீராங்கனையை தீவைத்து எரித்த காதலன்..!! காவல்துறை சொன்ன அதிர்ச்சி காரணம்..!!

English Summary

Trichy Arulmiku Jembugeswarar Akilandeswari temple has announced to fill the vacant post.

Chella

Next Post

பத்ம விருதுகள் 2025!. செப்.15.வரை பரிந்துரைக்கலாம்!. விண்ணப்பிக்கும் முறை!. முழுவிவரம் இதோ!

Wed Sep 4 , 2024
Nominations underway for Padma Awards 2025: Check last date, how to apply and other key details

You May Like