fbpx

10ஆம் வகுப்பு தேர்ச்சி விகிதம் – முதலிடத்தை தட்டிதூக்கிய அரியலூர்!! மிகவும் பின்னுக்கு தள்ளப்பட்ட சென்னை!!

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் மாவட்ட வாரியான தேர்ச்சி விகிதத்தில் அரியலூர் மாவட்டம் முதலிடத்தை பிடித்துள்ளது. இந்த வருடம் சென்னை மிகவும் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மொத்தம் 8,94,264 மாணவ/மாணவியர் பங்கேற்றிருந்தனர். இவர்களில் 8,18,743 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த ஆண்டின் ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் 91.55 ஆகும். மேலும் பள்ளிகள் வாரியாக அரசுப் பள்ளிகள் 87.90%, அரசு உதவி பெறும் பள்ளிகள் 91.77%, தனியார் பள்ளிகள் 91.43%, இருபாலர் பள்ளி 91.93%, பெண்கள் பள்ளிகள் 93.80% என தேர்ச்சி விகிதம் இருக்கிறது. இந்த தேர்வில் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கூலி தொழிலாளி மகள் மாணவி காவிய ஜனனி 500க்கு 499 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.

மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்: 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் இந்தாண்டு அரியலூர் மாவட்டம் முதலிடத்தை பிடித்துள்ளது. இரண்டாம் இடத்தில் சிவகங்கையம் மூன்றாம் இடத்தில் ராமநாதபுரம் மாவட்டமும் உள்ளது.எந்தெந்த மாவட்டங்கள் எவ்வளவு தேர்ச்சி விகித்தை பெற்றுள்ளன என்பதை விரிவாக பார்க்கலாம்.

அரியலூர் 97.31%
சிவகங்கை 97.02%
ராநாதபுரம் 96.36%
கன்னியாகுமரி 96.24%
திருச்சி 95.23%
விருதுநகர் 95.14%
ஈரோடு 95.08%
பெரம்பலூர் 94.77%
தூத்துக்குடி 94.39%
விழுப்புரம் 94.11%
மதுரை 94.07%
கோவை 94.01%
கரூர் 93.59%
நாமக்கல் 93.51%
தஞ்சை 93.40%
நெல்லை 93.04%
தென்காசி 92.69%
தேனி 92.63%
கடலூர் 92.63%
திருவாரூர் 92.49%
திருப்பூர் 92.38%
திண்டுக்கல் 92.32%
புதுக்கோட்டை 91.84%
சேலம் 91.75%
கிருஷ்ணகிரி 91.43%
ஊட்டி 90.61%
மயிலாடுதுறை 90.48%
தருமபுரி 90.45%
நாகை 89.70%
சென்னை 88.21%
திருப்பத்தூர் 88.20%
காஞ்சிபுரம் 87.55%
செங்கல்பட்டு 87.38%
கள்ளக்குறிச்சி 86.83%
திருவள்ளூர் 86.52%
திருவண்ணாமலை 86.10%
ராணிப்பேட்டை 85.48%
வேலூர் 82.07%

மேலும் காரைக்காலில் 78.20%, புதுச்சேரியில் 91.28% மாணவ, மாணவிகள் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Read More: வெளியே வரும் அரவிந்த் கெஜ்ரிவால்… இடைக்கால ஜாமீன் கொடுத்த உச்ச நீதிமன்றம்!

Baskar

Next Post

மாளவிகாவால் எனக்கும், குஷ்பூவுக்கும் பெரிய சண்டை.... மனம் திறந்த சுந்தர்.சி....

Sat May 11 , 2024
நடிகை மாளவிகாவால் எனக்கும் குஷ்புவுக்கும் சண்டை வந்தது என்று இயக்குனர் சுந்தர் சி அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது நேரத்தில் வரலாறு வருகிறது. தமிழ் திரையுலகில் பிரபல இயக்குநராகவும், நடிகராகவும் வலம் வந்து கொண்டிருப்பவர் சுந்தர்.சி. இவர் 1995-ம் ஆண்டு ‘முறை மாமன்’என்ற படத்தினை இயக்கினார். இவர் இயக்கிய முதல் தமிழ் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று சூப்பர் ஹிட்டானது. இதனையடுத்து, நகரம், கலகலப்பு, அரண்மனை […]

You May Like