fbpx

10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்..!! மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா..? உடனே அப்ளை பண்ணுங்க..!!

தபால் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தபால் துறையில் தற்போது ஸ்டாப் கார் டிரைவர் (Staff Car Driver) பணிக்கு 27 காலியிடங்கள் உள்ளன. இப்பணிக்கு தேர்வு செய்யப்படுவோர் கர்நாடகாவில் பணியமர்த்தப்படுவார்கள். பெங்களூருவில் 15 பேர், மைசூரில் 3 பேர் , மற்றவர்கள் சிக்கோடு, கலபுரி, ஹாவேரி, கார்வார், மண்டியா, புத்தூர், சிவமொக்கா, உடுப்பி, கோலார் உள்ளிட்ட இடங்களில் பணியமர்த்தப்படுவார்கள்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர் 18 வயது முதல் 27 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 வயது வரையும், ஓபிசி பிரிவினருக்கு 3 வயது வரையும் தளர்வு.

கல்வித்தகுதி:

10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். லைட் மற்றும் ஹெவி லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும். டிரைவிங்கில் 3 ஆண்டு அனுபவம் இருக்க வேண்டும்.

சம்பளம்:

குறைந்தபட்சமாக ரூ.19,900 முதல் அதிகபட்சமாக ரூ.63,200 வரை சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பிப்பது எப்படி?

www.inidapost.gov.in எனும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பத்தை டவுன்லோட் செய்து பூர்த்தி செய்ய வேண்டும். உரிய ஆவணங்களின் நகல்களை இணைத்து கீழ்கண்ட முகவரிக்கு ஸ்பீட் போஸ்ட் அல்லது ரிஜிஸ்டர் போஸ்ட் மூலம் அனுப்பி வைக்கவும். மே 15ஆம் தேதி மாலை 5 மணிக்குள் கிடைக்கும் படி அனுப்ப வேண்டும். விண்ணப்ப கவரின் மேல்புறத்தில் ‛‛Applicaton for the post of Staff Car Driver (Direct Recruitment) at MMS Bengaluru” என குறிப்பிட வேண்டும்.

முகவரி:

The Manager, Mail Motor Service, Bengaluru – 560 001

மேலும் விவரங்கள்:

இந்த பணியிடம் தொடர்பான மேலும் விவரங்களை அறிந்து கொள்ள https://www.indiapost.gov.in/VAS/Pages/Recruitment/IP_19042024_MMS_English.pdf என்ற இணையதளத்தை பார்வையிடவும்.

Read More : சிக்னல் வந்தாச்சு..!! தமிழகத்தை குளிர்விக்க போகும் மழை..!! கனமழையும் இருக்காம்..!! இன்று முதல் ஆரம்பம்..!!

Chella

Next Post

கூகுள் பணியாளர்களை நியமித்த ஆப்பிள் நிறுவனம்!… அம்பலமான ரகசியம்!… திட்டம் என்ன?

Fri May 3 , 2024
Google workers: ஆப்பிள் தனது ரகசிய AI ஆய்வகத்தை சூரிச்சில் அமைக்க கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் கூகுள் (Google) நிறுவனத்தில் வேலை பார்த்த 36 முன்னாள் ஊழியர்களை பணியமர்த்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கூகுளில் இருந்து ஆப்பிளுக்கு ‘ஜம்ப்’ அடித்த 36 ஊழியர்களுமே ஏஐ (AI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் துறையில் கில்லாடிகள் ஆவார்கள். இந்த குழு ஏஐ மாடல்கள் மற்றும் தயாரிப்புகளை உருவாக்குவதற்காக […]

You May Like