இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பதவியின் பெயர்: அலுவலக ஓட்டுநர்
காலியிடங்கள் எண்ணிக்கை: பொதுப் பிரிவில் 3 இடங்களும், பட்டியல் இனத்தவர் பிரிவில் ஓரிடமும், பட்டியல் பழங்குடியினர் பிரிவில் ஓரிடமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி: 10ஆம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இலகுரக வாகனம் (Light motor vehicle) ஓட்டுவதற்கான ஓட்டுநர் உரிமம் இருக்க வேண்டும். 10 ஆண்டுகளுக்கு குறையாமல் வாகனங்களை ஓட்டியமைக்கான அனுபவம் இருக்க வேண்டும்.
மொழி அறிவு: உள்ளூர் மொழியான மராத்தி பேச தெரிந்திருக்க வேண்டும். ஆங்கிலம் மற்றும் இந்தியில் சரளமாக பேசத் தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 01.03.2023 அன்று 28- 35 வயதுக்குள் இருக்க வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் சாதிகள்/ பட்டியல் பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 3 ஆண்டுகள் வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள்.
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, வாகன ஓட்டுநர் திறன் தேர்வு
விண்ணப்பம்: இதற்கான விண்ணப்ப செயல்முறை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 16ஆம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பக் கட்டணம்: இதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ. 450 ஆகும். பட்டியல் இனத்தவர், பட்டியல் பழங்குடியினர், முன்னாள் ராணுவத்தினர் ரூ.50 மட்டும் செலுத்தினால் போதும். தகுதியும், ஆர்வமுள்ளவர்கள் www.rbi.org.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.