நாடாளுமன்றத்தில் அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியதற்காக 11 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஒரு வார காலத்திற்கு இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்து விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்க்ள் குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.. இதனால் மக்களவை, மாநிலங்களவை என 2 அவைகளுமே கடந்த வாரம் முழுவதுமே முடங்கின.. இந்நிலையில் இன்று மாநிலங்களவை கூடிய போது, “ஜிஎஸ்டி வரி உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று கூறி கோஷங்களை எழுப்பியதால் அவையில் அமளி ஏற்பட்டது.
கைதட்டி முழக்கங்களை எழுப்புவது விதிகளுக்கு எதிரானது என்று மாநிலங்களவை துணைத்தலைவர் தெரிவித்தார்.. மேலும், தங்கள் இருக்கைகளில் சென்று அமரவும் வலியுறுத்தினார்.. நீங்கள் சபையை செயல்பட விடவில்லை என்பதை ஒட்டுமொத்த தேசமும் பார்த்துக் கொண்டிருக்கிறது” என்று தெரிவித்தார்..
இதை தொடர்ந்து விலைவாசி உயர்வு, பணவீக்கத்தை கண்டித்து முழக்கங்களை எழுப்பிய 11 மாநிலங்களவை எம்.பிக்களை சபாநாயகர் இடைநீக்கம் செய்தார்.. அதன்படி முரளீதரன், ஹேக், சென், அபிர் பிஸ்வாஸ், மௌசம் நூர், சுஷ்மிதா தேவ், சாந்தா சேத்ரி, முகமது அப்துல்லா, ஏ.ஏ.ரஹீம், எல்.யாதவ் மற்றும் வி.சிவதாசன் ஆகிய எம்பிக்கள் இடைநீக்கம் ஒரு வாரத்திற்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
முன்னதாக நேற்று நாடாளுமன்ற நடவடிக்கைகளை நடத்த விடமால அமளியில் ஈடுபட்டதாக எழுந்த புகாரில் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி உள்ளிட்ட 4 காங்கிரஸ் மக்களவை எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது..