fbpx

4ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி உரிமையாளர் உட்பட இருவர் அதிரடி கைது….!

மத்திய பிரதேச மாநிலம் திகாம்பர் மாவட்டத்தில் இருக்கின்ற பதக்ரா என்ற கிராமத்தில் ஒன்று முதல் 6ம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்கள் படித்து வரும் உண்டு உறைவிட பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 11 வயதான சிறுமி ஒருவர் 4ம் வகுப்பு படித்து வந்தார். இவரது பெற்றோர்கள் வெளியூரில் தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகின்ற நிலையில், அந்த சிறுமி இந்த பள்ளியில் தங்கி படித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் தான் மாணவியை பள்ளியின் உரிமையாளர் மற்றும் அவரது சகோதரர் உள்ளிட்டோர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி இருக்கிறார்கள். தொடர்ச்சியாக மாணவிக்கு இந்த கொடுமை நடந்து இருக்கின்ற நிலையில், இந்த சம்பவம் குறித்து மாணவியுடன் படிக்கும் உறவுக்கார சிறுவன் நேரில் பார்த்திருக்கிறார்.

ஆகவே மாணவியின் குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கு இந்த உண்மை தெரியவந்துள்ளது. அதோடு காவல்துறையினரிடமும் புகார் வழங்கப்பட்டது. அதன் பெயரில் கார்கபூர் காவல் நிலையத்தில் பள்ளியின் உரிமையாளர் மற்றும் அவருடைய சகோதரர் உள்ளிட்டோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது இருவரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Post

வீட்டில் தனிமையில் இருந்த 13 வயது சிறுமிக்கு…..! போதை மருந்து கொடுத்து தொடர் பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடி கைது…..!

Mon Jun 12 , 2023
மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பையில் இருக்கின்ற சேம்பூர் பகுதியில் 13 வயது சிறுமி மயக்க மருந்து கொடுக்கப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தில் அந்த பகுதியைச் சேர்ந்த 19 வயது இளைஞர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். பெற்றோர் இருவரும் வேலைக்கு சென்று விட்ட நிலையில், கோடை விடுமுறை என்பதால் சிறுமி மட்டும் தனிமையாக இருந்துள்ளார். அப்போது அந்த இளைஞர் அந்த சிறுமியின் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றார். ஆகவே சிறுமி தனிமையாக […]

You May Like