fbpx

11 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிந்தது!… ஜி.வி.பிரகாஷ் – சைந்தவி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

GV Prakash – Saindhavi: தமிழ் திரையுலகில் நட்சத்திர தம்பதிகளாக கடந்த 11 ஆண்டுகளாக இருந்து வந்த இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் – பின்னணி பாடகி சைந்தவி ஆகியோர் பிரிந்து வாழ்வதென முடிவு எடுத்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான இசையமைப்பாளராக ஜி.வி. பிரகாஷ் இருந்து வருகிறார். அத்துடன் நடிகர், பாடகர் என பல துறைகளில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி ஏராளமான ரசிகர்களை ஜிவி பிரகாஷ் பெற்றுள்ளார். சிறு வயது முதலையே முதலே பின்னணி பாடல்கள் பலவற்றை ஜிவி பிரகாஷ் பாடியுள்ளார்.

இவர் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானின் சொந்த அக்கா ஏ.ஆர். ரைஹானாவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது முன்னணி இசையமைப்பாளராக மாறியுள்ள ஜிவி பிரகாஷ் வெயில் என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். கடந்த சில ஆண்டுகளாக அவர் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து படங்களில் நடித்து வருகிறார்.

இதற்கிடையே ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட நட்பு, பின்னாளில் காதலாக மாறியது. சில ஆண்டுகள் இருவரும் காதலித்து வந்த நிலையில், 2013 ஆம் ஆண்டு பெற்றோர்கள் முன்னிலையில் ஜி.வி. பிரகாஷ் -சைந்தவி ஆகியோர் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு அன்வி என்ற மகள் உள்ளார். இந்த நிலையில் ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி ஆகியோர் பிரிந்து வாழ முடிவு எடுத்து இருப்பதாக அறிவித்துள்ளனர். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஜிவி பிரகாஷ் தற்போது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக ஜிவி பிரகாஷ் தனது எக்ஸ் பக்கத்தில், திருமணம் ஆகி 11 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் நானும் சைந்தவியும் பிரிந்து வாழ்வதென முடிவு செய்துள்ளோம். எங்களுடைய தனி உரிமைக்கு (Privacy) ஊடக நண்பர்கள், ரசிகர்கள் மதிப்பு தருமாறு கேட்டுக்கொள்கிறோம். இந்த தருணத்தில் உங்களுடைய புரிதலும், ஆதரவும் எங்களுக்கு ஆறுதல் அளிக்கும் என்று கூறியுள்ளார்.

Readmore: ஷாக்!… மீண்டும் தலைதூக்கும் பறவைக் காய்ச்சல்!… வாத்துகள், கோழிகளை கொல்ல அரசு முடிவு!

Kokila

Next Post

தினசரி சமையலுக்கு ஏற்றதா தேங்காய் எண்ணெய்? அதிலுள்ள கொழுப்பு ஆபத்தா?

Tue May 14 , 2024
தேங்காய் எண்ணெய் தினசரி சமையலுக்கு பயன்படுத்தினால் உடலுக்கு நல்லதா? இல்லை தேங்காய் எண்ணெய் பயன்படுத்தினால் உடலில் கொழுப்புச்சத்து அதிகரிக்குமா? என்ற சந்தேகம் உங்களுக்கு எழலாம். கொப்பரைத் தேங்காயில் இருந்தோ, ஃப்ரெஷ் தேங்காயில் இருந்து எடுத்த பாலிலிருந்தோ தேங்காய் எண்ணெய் எடுக்கப்படுகிறது. இதில் சாச்சுரேட்டடு வகை கொழுப்பு இருக்கும். அது உடல்நலத்துக்கு ஆரோக்கியமானது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். தேங்காய் எண்ணெய்யில் உள்ள கொழுப்பு ஆபத்தா? சுத்தமான தேங்காய் எண்ணெய்யை சருமத்தில் மாய்ஸ்ச்சரைசராகவும் […]

You May Like