fbpx

IIT students: இந்தியாவில் 20 ஆண்டுகளில் 115 ஐஐடி மாணவர்கள் தற்கொலை! – RTI இல் அதிர்ச்சி தகவல்

இந்தியாவில் கடந்த 20 ஆண்டுகளில் இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (ஐஐடி) 115 மாணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதில் சென்னையில் அதிகபட்சமாக 26 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (ஐஐடி) 2005 முதல் 115 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக ஐஐடி கான்பூர் முன்னாள் மாணவரும், குளோபல் ஐஐடி முன்னாள் மாணவர் குழுவின் நிறுவனருமான தீரஜ் சிங் தகவல் அறியும் உரிமை (ஆர்டிஐ) மூலம் பெறப்பட்ட தகவல்கள் தெரியவந்துள்ளன. இவற்றில், 98 இறப்புகள் வளாகத்தில் நிகழ்ந்தன, இதில் 56 பேர் தூக்கில் தொங்கியதால் இறந்தனர், 17 பேர் வளாகத்திற்கு வெளியே இறந்தனர் என்ற அதிர்ச்சித் தகவல் தெரியவந்துள்ளது.

பிப்ரவரி 12, 2023 அன்று ஐஐடி பம்பாய் மாணவர் தர்ஷன் சோலங்கியின் மரணம், கடந்த 20 ஆண்டுகளில் நாடு முழுவதும் உள்ள ஐஐடி மாணவர்களின் இறப்புகள் குறித்த தரவுகளைக் கோரி தகவல் அறியும் விண்ணப்பத்தை தாக்கல் செய்ய சிங்கைத் தூண்டியது. அதன்படி மேற்கொள்ளப்பட்ட தரவுகளின்படி, 2005 மற்றும் 2024 க்கு இடையில், ஐ.ஐ.டி மெட்ராஸில் அதிகபட்சமாக 26 பேரும், ஐ.ஐ.டி கான்பூரில் 18 பேரும், ஐ.ஐ.டி காரக்பூரில் 13 பேரும், ஐ.ஐ.டி மும்பையில் 10 பேரும் உயிரிழந்துள்ளனர். இந்த ஆண்டு இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (ஐஐடி) 2005ஆம் ஆண்டு முதல் இதுவரை 115 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதில் 98 இறப்புகள் கல்லூரி வளாகத்தில் நடந்துள்ளன. இதில் 17 பேரின் உயிரிழப்பு ஐஐடி வளாகத்திற்கு வெளியே நடந்துள்ளன. இறந்தவர்களில் 56 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

மேலும் இதுதொடர்பாக ஐஐடி கான்பூரின் முன்னாள் மாணவரும், ஐஐடி முன்னாள் மாணவர் ஆதரவுக்குழு நிறுவனருமான  தீரஜ் சிங் கூறுகையில், “நாட்டின் முன்னணி நிறுவனங்களில் மாணவர்கள் மீதான அழுத்தம் அதிகரித்துள்ளதை முன்னிலைப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் மன அழுத்தத்தைக் குறைக்க ஐஐடி கல்வியை மேம்படுத்துவது அவசரத் தேவையாக உள்ளது” என்றார்.

சோலங்கியின் மரணத்திற்குப் பிறகு பல்வேறு ஐஐடி மாணவர் அமைப்புகளால் நடத்தப்பட்ட ஆய்வுகளில் பதிலளித்தவர்களில் 61 சதவீதம் பேர் மாணவர் இறப்புகள் கல்வி மனஅழுத்தத்தால் ஏற்பட்டதாக கூறியுள்ளனர். இதைத் தொடர்ந்து வேலைப் பாதுகாப்பின்மை என 12 சதவீதம் பேர், குடும்பப் பிரச்சனைகள் காரணமான 10 சதவீதம் பேர், துன்புறுத்தல்கள் காரணமாக 6 சதவீதம் பேரும், மற்ற காரணங்களுக்காக 11 சதவீத மாணவர்களும் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளனர்.

Next Post

தினமும் காலையில் இந்த தவறை மட்டும் பண்ணாதீங்க..!! நிச்சயம் வெயிட் போடும்..!! என்ன தெரியுமா..?

Thu May 2 , 2024
காலையில் உணவை தவிர்ப்பதால், பின்னாளில் பெரும் பிரச்சனைகள் ஏற்படும் என மருத்துவர்கள் பலர் கூறியும் பலர் தங்கள் உடல் நலன் நன்றாக இருக்கும் வரை இது குறித்து கவலையே படுவதில்லை. ஆனால், மொத்தமாக சேர்த்து வைத்து இது உடலில் உபாதையை ஏற்படுத்தும் போது, அந்த உடல் வலியை தாங்கிக்கொள்வது அவர்கள்தான். எனவே, காலையில் ஏன் கண்டிப்பாக சாப்பிட வேண்டும் என்பது குறித்தும், அப்படி சாப்பிடாமல் போனால் என்ன நேரும் என்பது […]

You May Like