11-ம் வகுப்புக்கான துணைத்தேர்வுகள் ஜூலை 2 முதல் 9-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
11-ம் பொதுத்தேர்வு முடிவுகளை நேற்று தேர்வுத் துறை வெளியிட்டது. மதிப்பெண்களுடன் தேர்வு முடிவுகள் மாணவர்களின் செல்போன் எண்ணுக்கு எஸ்எம்எஸ் மூலமும், பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலமும் அனுப்பப்பட்டன. மாணவர்கள் 87.26 சதவீதமும், மாணவிகள் 94.69 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த நிலையில் தேர்வு எழுதாத மாணவர்கள் துணை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில்; 11-ம் வகுப்புக்கான துணைத்தேர்வுகள் ஜூலை 2 முதல் 9-ம் தேதி வரை நடைபெற உள்ளது. பள்ளி மாணவர்கள் இன்று ஜூன் 1-ம் தேதிக்குள் அவரவர் படித்த பள்ளிகளுக்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். இதுதவிர தனித்தேர்வர்கள் கல்வி மாவட்டவாரியாக உள்ள அரசு சேவை மையங்களுக்கு சென்று தங்கள் விண்ணப்பங்களை தேர்வுக் கட்டணம் செலுத்தி பதிவுசெய்ய வேண்டும்.
விண்ணப்பிக்க தவறிய மாணவர்கள் ஜூன் 3, 4-ம் தேதிகளில் தட்கல் முறையில் விண்ணப்பிக்கலாம். அதற்கு தேர்வுக் கட்டணத்துடன் கூடுதலாக ரூ.1000 செலுத்த வேண்டும். கூடுதல் விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.