fbpx

12 மணி நேர வேலை மசோதா..!! அமைச்சர்கள் அவசர ஆலோசனை..!! தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு..!!

12 மணி நேர வேலை மசோதா குறித்து தொழிற்சங்கங்களுடன் அமைச்சர்கள் இன்று ஆலோசனை நடத்துகின்றனர்.

தனியார் நிறுவனங்களில் பணியாளர்களின் வேலைநேரத்தை 12 மணி நேரமாக உயர்த்த வகை செய்யும் சட்டத்திருத்த மசோதா, பேரவையில் நிறைவேற்றப்பட்டது. தொழிலாளர்களுக்கு 8 மணி நேர வேலை என்ற சட்டம் அமலில் இருந்து வரும் நிலையில், அதை 12 மணி நேரமாக உயர்த்தும் சட்ட மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தாக்கல் செய்தார்.

இந்த மசோதாவுக்கு தி.மு.க. கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், தமிழக வாழ்வுரிமை கட்சி எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பா.ம.க., பா.ஜ.க.வும் தங்கள் தரப்பு எதிர்ப்பை பதிவு செய்தது. மேலும், இதை கண்டித்து முதல் முறையாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் வெளிநடப்பு செய்தன. இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கிடையே, 12 மணி நேரமாக வேலை நேரத்தை உயர்த்தும் சட்ட மசோதா குறித்து விளக்கவும், தொழிற்சங்கத்தினர் கருத்துக்களை அறியவும் அரசு சார்பில் ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டம் இன்று (திங்கட்கிழமை) மதியம் 3 மணிக்கு சென்னை, தலைமைச் செயலகத்தில் நடைபெறவுள்ளது. இதில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் பங்கேற்கின்றனர்.

Chella

Next Post

கள்ளக்காதலுக்கு இடையூறு..!! காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று கணவனை தீர்த்துக் கட்டிய கொடூரம்..!!

Mon Apr 24 , 2023
புதுச்சேரியை அடுத்த அரியாங்குப்பம் பூங்கொடிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஞானசேகரன் (வயது 39). இவரது மனைவி லூர்துமேரி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வந்தனர். கடந்த 29ஆம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற ஞானசேகரன், அதன்பிறகு வீடு திரும்பவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால், அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் மனைவி லூர்துமேரி புகார் அளித்தார். இதையடுத்து, […]

You May Like