Maoists: சத்தீஸ்கர் மாநிலத்தில் 12 மாவோயிஸ்டுகள் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூர் மாவட்டத்தில் உள்ள கங்களூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நேற்று முன்தினம் முதல் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். 8 மணிநேரம் நடந்த தேடுதல் வேட்டையில் 12 மாவோயிஸ்டுகளை பாதுகாப்பு படையினர் என்கவுண்டரில் சுட்டுக்கொன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, இரண்டு பாதுகாப்புப் பணியாளர்கள் காயமடைந்தனர். முன்னதாக கடந்த ஏப்ரல் 2 அன்று பாதுகாப்புப் படையினர் 13 மாவோயிஸ்டுகளை என்கவுண்டரில் சுட்டுகொன்றனர்.
அந்தவகையில் இந்த ஆண்டு ஏற்கனவே கொல்லப்பட்ட மாவோயிஸ்டுகளின் எண்ணிக்கை 100 ஐ தாண்டியுள்ளது, அதாவது, 2024ல் 100க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். இது 2023 இன் முழு ஆண்டு எண்ணிக்கையை விட மூன்று மடங்கு அதிகமாகும்.
Readmore: ஒருநாளைக்கு எவ்வளவு நேரம் தூங்கவேண்டும், பணி செய்யவேண்டு?… ஐசிஎம்ஆர் பரிந்துரை!