fbpx

12 ரயில் பெட்டிகள் தடம் புரண்டு விபத்து..!! பயணிகளின் நிலை..? உத்தரப்பிரதேசத்தில் அதிர்ச்சி..!!

உத்தரப்பிரதேச மாநிலம் கோண்டா என்ற இடத்தில் சண்டிகர் – திப்ரூகர் எக்ஸ்பிரஸ் ரயிலின் 4 ஏசி பெட்டிகள் உட்பட மொத்தம் 12 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த 12 பெட்டிகளில் இருந்து பயணிகளை மீட்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சண்டிகரில் இருந்து அசாமின் திப்ரூகர் செல்லக் கூடியது சண்டிகர் – திப்ரூகர் எக்ஸ்பிரஸ் ரயில் (15904).

இந்த எக்ஸ்பிரஸ் ரயில் சண்டிகரில் இருந்து நேற்றிரவு 11.35 மணிக்குப் புறப்பட்டது. அசாமின் திப்ரூகரை நாளை மறுநாள் சென்றடையும். இந்நிலையில், இன்று பிற்பகல் 2 மணியளவில் கோண்டா மாவட்டத்தில் உள்ள மோதிகஞ்ச் ஜிலாகி என்ற இடத்தில் சண்டிகர் – திப்ரூகர் எக்ஸ்பிரஸ் ரயிலின் 10 முதல் 12 பெட்டிகள் திடீரென தடம் புரண்டன. இதில் 4 ஏசி பெட்டிகளும் அடங்கும்.

இந்த ரயில் பெட்டிகள் தடம் புரண்டதால், பயணிகள் இடிபாடுகளிடையே சிக்கிக் கொண்டனர். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு மாநில பேரிடர் மீட்பு படை, தீயணைப்புத் துறையினர் விரைந்துள்ளனர். இந்த விபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஆம்புலன்ஸ் வாகனங்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அங்கு மீட்பு பணிகள் விரைந்து மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Read More : இப்படி ஒரு விநோத கிராமமா..? எப்படித்தான் மக்கள் வாழ்கிறார்கள்..? சுவாரஸ்ய தகவல்..!!

English Summary

A total of 12 coaches, including 4 AC coaches, of the Chandigarh-Dibrugarh Express derailed at Gonda in Uttar Pradesh.

Chella

Next Post

ஆம்ஸ்ட்ராங் கொலை..!! மூளையாக இருந்த பாஜக நிர்வாகி..!! யார் இந்த அஞ்சலை..?

Thu Jul 18 , 2024
Special forces police are actively searching for the BJP women's team leader Anjali who has a key link in the Armstrong murder case. Another administrator, Selvaraj, is also being searched online.

You May Like