தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் (Tamilnad Mercantile Bank) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் வங்கி தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி. இந்த வங்கி நாடு முழுவதும் பல கிளைகளுடன் இயங்கி வருகிறது. இந்நிலையில், இந்த வங்கியில் தற்போது காலியாகவுள்ள வாடிக்கையாளர் சேவை அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
வங்கி : தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி (Tamilnad Mercantile Bank)
பணியின் பெயர் : வாடிக்கையாளர் சேவை அதிகாரி
காலியிடங்கள் : 124
கல்வித் தகுதி :
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 60% மதிப்பெண்களுக்கு மேல் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் எவ்வளவு..? :
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்து தேர்வானவருக்கு மாதம் ரூ.48,000 சம்பளம் வழங்கப்படும்.
வயது வரம்பு :
20 வயதுக்கு மேற்பட்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். ஆனால், 30 வயதை தாண்டியிருக்கக் கூடாது.
தேர்வு செய்யப்படும் முறை :
* எழுத்து தேர்வு
* நேர்முகத்தேர்வு
விண்ணப்பிப்பது எப்படி? :
https://www.tmbnet.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 செலுத்தி விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி நாள் : 16.03.2025
தேர்வு நடைபெறும் தேதி :
வரும் ஏப்ரல் மாதம் தேர்வு நடைபெறும். மே மாதம் தேர்வு முடிவு வெளியாகும். நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு கடிதம் மே 2025இல் நடைபெறும். ஜூன்/ ஜூலை மாதத்திற்குள் தேர்வு செய்யப்பட்ட பணியாளர்கள் பணியமர்த்தப்படுவார்கள்.
மேலும் விவரங்களுக்கு https://www.tmbnet.in/tmb_careers/doc/ADV_SCSE_IBP_II.pdf?utm_source=DH-MoreFromPub&utm_medium=DH-app&utm_campaign=DH என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.