fbpx

12ம் வகுப்பு!… நடிகை கங்கனா ரணாவத்தின் சொத்து இத்தனை கோடியா?… வேட்புமனு தாக்கல் விவரம்!

Kangana Ranaut: இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள மண்டி மக்களவைத் தொகுதிக்கு ஜூன் 1ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது, இது நாடாளுமன்றத் தேர்தலின் ஏழாவது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு ஆகும். இந்தநிலையில், இந்திய திரை நட்சத்திரங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் கங்கனா ரணாவத், இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள மண்டி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார்.

இதற்காக கடந்த செவ்வாயன்று கங்கனா ரணாவத் வேட்பு மனு தாக்கல் செய்தார். அதில் தனக்கு 90 கோடிக்கு மேல் சொத்துக்கள் இருப்பதாக கங்கனா தனது வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளார். அவர் சமர்பித்த பிரமாண பத்திரத்தில் தான் சண்டிகரில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்துளளேன். தன்னிடம் 28 கோடி அசையும் சொத்துக்கள் மற்றும் 62 கோடி அசையா சொத்துக்கள் உள்பட தன்னிடம் 90 கோடிக்கு மேல் சொத்துக்கள் இருப்பதாக கங்கனா தனது பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.

மேலும், கையில் ரொக்கமாக ரூ.2 லட்சமும், வங்கியில் ரூ.1.35 கோடியும் உள்ளது. மும்பை, பஞ்சாப், மணாலி ஆகிய இடங்களில் கங்கனாவுக்கு சொத்துகள் உள்ளன, மேலும் பிஎம்டபிள்யூ, மெர்சிடிஸ் பென்ஸ், மெர்சிடிஸ் மேபேக் உள்ளிட்ட மூன்று சொகுசு கார்கள் வைத்து இருக்கிறார். இதன் மதிப்பு மட்டும் ரூ. 3.91 கோடி இருக்கும். இதுதவிர, 50 எல்ஐசி பாலிசிகளும் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அவரது சொத்து பற்றிய செய்தி அறிவிக்கப்பட்ட உடன், சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பல்வேறு கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக 50 எல்ஐசி பாலிசிகளைப் பற்றி கேள்விப்பட்டு பலர் திகைத்துப் போனாதாக ஒருவர் பதிவிட்டுள்ளார்.

Readmore: நீல நிற ஆதார் அட்டை!! இதை யாரெல்லாம் வாங்கலாம்!! விண்ணப்பிப்பது எப்படி?

Kokila

Next Post

முன்கூட்டியே தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை..!! இந்த மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான எச்சரிக்கை..!!

Thu May 16 , 2024
தமிழ்நாட்டில் திண்டுக்கல், தேனி, மதுரை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கிடையே, கனமழை காரணமாக மாவட்ட ஆட்சியர்களுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை அவசரக் கடிதம் அனுப்பியுள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு இலங்கை கடலோரப் பகுதிகளில், வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழ்நாட்டில், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், சிவகங்கை,தென்காசி, தேனி, திண்டுக்கல் ஆகிய […]

You May Like