fbpx

Result: நாளை வெளியாகும் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்…! இணையத்தில் எப்படி பார்ப்பது…?

நாளை 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது‌.

தமிழகத்தில் நடப்பாண்டில் 12-ம் வகுப்பு பயின்ற மாணவ, மாணவிகளுக்கு கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் மார்ச் 22-ம் தேதி வரையில் தேர்வு நடைபெற்றது. தேர்வு தாள் திருத்து பணியானது 88 முகாம்களில் 50,000 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு ஏப்ரல் 12-ம் தேதியில் இருந்து ஏப்ரல் 22-ம் தேதி வரையில் நடைபெற்று முடிந்தது. நாளை தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது‌.

தேர்வு முடிவுகளை எப்படி பார்ப்பது…?

12-ம் வகுப்பு தேர்வு முடிவுகளை தமிழக அரசின் இணையதளம் முகவரியான www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.gov.in ஆகிய இணையதள முகவரியில் சென்று தேர்வு முடிவுகளை பார்த்து கொள்ளலாம். தேர்வர்கள் தங்களது பதிவெண், பிறந்த தேதியை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

மேலும், தொலைபேசி எண்களுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவுகளை அனுப்பவும், மாணவர்கள் படித்து பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை கட்டணம் இல்லாமல் தெரிந்துக்கொள்ள முடியும். தேர்வு முடிவில் குறைந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள், ஸ்கேன் செய்யப்பட்டுள்ள தங்கள் விடைத்தாள் நகலை கேட்டுப்பெற்று, அதனை ஆய்வு செய்து கூடுதல் மதிப்பெண் பெற முடியும் என்று கருதினால், மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்படும்.

Vignesh

Next Post

நாடு முழுவதும் இன்று நீட் நுழைவுத் தேர்வு..! மாணவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பு..!

Sun May 5 , 2024
எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெறவுள்ளது. இந்தாண்டும் மாணவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. எம்பிபிஎஸ்., பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவப்படிப்புகளில் 2024, 2025ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வு இன்று(05.05.2024)நடைபெறுகிறது. இந்த தேர்வுக்கு நாடு முழுவதிலும் இருந்து 24 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தமிழ்நாட்டில் மட்டும் இந்தாண்டு ஒன்றரை லட்சம் மாணவ, மாணவிகள் நீட் தேர்வை எழுதுகிறன்றனர். […]

You May Like