fbpx

மாணவர்களே…! 12-ம்‌ வகுப்பு துணைத் தேர்வுகளுக்கு.. இன்று முதல் ஹால் டிக்கெட்…! வெளியான அறிவிப்பு…!

12-ம்‌ வகுப்பு துணைத்தேர்வெழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள்‌ இன்று முதல் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தமிழகத்தில்‌ 12-ம்‌ வகுப்பு துணைத்தேர்வெழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள்‌ தங்களது தேர்வுக்கூட நுழைவுச்‌ சீட்டுகளை இன்று முதல்‌ www dge.tn.gov.in என்ற இணையதளத்தில்‌ பதிவு எண்‌, பிறந்த தேதியை பதிவு செய்து பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌. தேர்விற்கான அட்டவணை அரசு தேர்வுத்துறையின்‌ இணையதளத்தில்‌ வெளியிடப்பட்டுள்ளது.

மேலும்‌, செய்முறை தேர்வுகள்‌ குறித்து தனித்‌ தேர்வுகள்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தேர்வு மையத்தின்‌ முதன்மை கண்காணிப்பாளரை அணுகி தெரிந்து கொள்ள வேண்டும்‌. உரிய தேர்வுக்கூட நுழைவுச்‌ சீட்டு இல்லாமல் எந்த ஒரு தேர்வர்களும் தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்‌ என அரசு தேர்வர்கள்‌ இயக்ககம்‌ தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

இளைமையாகவும், சருமத்தைப் பராமரிக்கவும் பச்சைப் பால் ஒன்னே போதும்!... இப்படி பயன்படுத்துங்கள்!

Wed Jun 14 , 2023
சருமத்தை அவ்வப்போது கவனித்துக்கொள்வதன் மூலம், உங்கள் சருமம் நீண்ட காலத்திற்கு இளமையாக இருக்கும். அதே நேரத்தில், நீங்கள் இதற்கு வீட்டு பொருட்களைப் பயன்படுத்தலாம். முகத்தில் உள்ள சருமம் மிகவும் மென்மையானது. இதை நாம் அனைவரும் அறிவோம். அதே நேரத்தில், முகத்தின் தோலை கவனித்துக்கொள்வது மிகவும் முக்கியம், இதனால் உங்கள் தோல் நீண்ட காலத்திற்கு இளமையாக இருக்கும். இதற்காக நாம் கிடைக்கும் பல வகையான பொருட்களை பயன்படுத்தினாலும், அவை முகத்தில் உள்ள […]

You May Like