இந்தியன் ரயில்வேயில் காலியாக இருக்கின்ற பணியிடங்களை நிரப்பும் விதமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, வடகிழக்கு ரயில்வேயில் இருக்கின்ற காலி பணியிடங்களை ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இந்த பணிகளுக்கு விண்ணப்பங்கள் இந்த மாதம் இறுதி வரையில் வரவேற்கப்படுகின்றன.

ஸ்போர்ட்ஸ் கோட்டா: ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் 2, 3,4,5 உள்ளிட்ட நிலைகளில் பணியிடங்களுக்கு ரூபாய் 5,200 , 20,200 உள்ளிட்டவற்றின் அடிப்படையில் ஊதிய விகிதம் நிரப்பப்பட உள்ளது. சென்ற 2 ஆண்டுகள் விளையாட்டு துறையில் சாதனைகளை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
வயதுவரம்பு மற்றும் கல்வித் தகுதி: இந்த பணிகளுக்கு விண்ணப்பம் செய்வதற்கு 18 வயதில் இருந்து 25 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. கல்வித் தகுதி இதற்கு விண்ணப்பம் செய்யும் விளையாட்டு வீரர்கள் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும் தொழில்நுட்ப பிரிவுக்கு 12 ஆம் வகுப்பில் அறிவியல் பிரிவில் படித்திருக்க வேண்டும் அத்துடன் கிராண்ட் பே ரூபாய் 2800 பிரிவு பணிகளுக்கு பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது.
தேர்வு செய்யப்படும் முறை: ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் விண்ணப்பதாரர்களுக்கு திறன் தேர்வு மற்றும் விளையாட்டு துறையில் படைத்த சாதனையை அடிப்படையாக வைத்து பணிக்கான தேர்வு நடைபெறும். இதனை அடிப்படையாகக் கொண்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பம் செய்யும் முறை: இந்த பணிகளுக்கு விண்ணப்பம் செய்ய ஆர்வமாக இருப்பவர்கள், ner.Indianrailways.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பம் செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது. அத்துடன் விண்ணப்ப கட்டணமாக 500 ரூபாய் செலுத்த வேண்டும் எஸ்சி, எஸ்டி பிரிவை சார்ந்தவர்கள் 250 ரூபாய் தேர்வு கட்டணமாக செலுத்தினால் போதுமானது. இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்வதற்கு 25- 12- 2022 ஆண்டு மாலை 5 மணிக்கு வரையில் காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.