fbpx

கிருஷ்ணகிரியில் மேலும் 13 மாணவிகள் பாலியல் பலாத்காரம்..? தேசிய மகளிர் ஆணையம் அதிரடி உத்தரவு..!!

கிருஷ்ணகிரி பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே கந்திகுப்பம் கிராமத்தில் செயல்படும் தனியார் பள்ளியில், கடந்த 5ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை என்சிசி முகாம் நடைபெற்றது. அதில், 17 மாணவிகள் கலந்து கொண்டனர். முகாமில் பங்கேற்ற 8ஆம் வகுப்பு படித்து வரும் 13 வயது மாணவியை பயிற்சியாளரும், நாம் தமிழர் கட்சி நிர்வாகியுமான சிவராமன் (35) பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்.

மேலும் 13 மாணவிகள் பாலியல் தொல்லைக்கு உள்ளானதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பயிற்சியாளர் சிவராமன் உள்பட 11 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். சிவராமன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ததும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். மாணவி வன்கொடுமை விவகாரத்தை தாமாக முன்வந்து மகளிர் ஆணையம் விசாரணைக்கு எடுத்துள்ளது.

பள்ளி மாணவி பலாத்காரம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மாணவி வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக குற்றவாளி மீது உரிய பிரிவுகளில் வழக்குப்பதிய உத்தரவிட்டுள்ளது. குறிப்பிட்ட காலத்திற்குள் நேர்மையான விசாரணை நடத்தி, குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தர அறிவுறுத்தியுள்ளது. மாணவி வன்கொடுமை விவகாரத்தில் காவல்துறை, தமிழ்நாடு அரசு 3 நாட்களில் விரிவான அறிக்கை அளிக்கவும் தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Read More : ‘பைப் மூலம் வீட்டிற்கே கேஸ்’..!! தொடங்கியது புக்கிங்..!! உங்களுக்கும் வேண்டுமா..?

English Summary

The National Commission for Women has issued a notice regarding the rape of a Krishnagiri schoolgirl.

Chella

Next Post

20 மணி நேரம் பயணம்.. ரயிலில் உக்ரைனுக்கு செல்லும் பிரதமர் மோடி..!! என்ன காரணம் தெரியுமா?

Wed Aug 21 , 2024
PM Modi to travel on luxurious Train Force One to Ukrainian capital Kyiv. Check key features

You May Like