fbpx

துணை ராணுவப்படையினர் குவிப்பு..! சிறைக்கு செல்கிறார் சந்திரபாபு நாயுடு..! ஆந்திரா முழுவதும் 144 தடை..!

ஆந்திராவில் கடந்த 2014 முதல் 2019-ம் ஆண்டு வரை முதலமைச்சராக பதவி வகித்தவர் சந்திரபாபு நாயுடு. அந்தக் காலக்கட்டத்தில் தான் ஆந்திராவுக்கு நூற்றுக்கணக்கான ஐடி நிறுவனங்கள் வந்தன. இந்நிலையில், புதிய ஐடி நிறுவனங்களுக்கு அனுமதி கொடுப்பதற்காக முறைகேடாக ரூ.118 கோடி ரூபாய் வரை லஞ்சம் பெற்றதாக சந்திரபாபு நாயுடு மீது புகார் எழுந்தது. இதுதொடர்பாக போலீஸார் அண்மையில் வழக்கு பதிவு செய்தனர்.

இதுதொடர்பான விசாரணையில், சந்திரபாபு நாயுடு மீது குற்ற முகாந்திரம் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, நேற்று அதிகாலை சந்திரபாபு நாயுடுவை போலீஸார் அதிரடியாக கைது செய்தனர். பின்னர் விஜயவாடாவில் உள்ள சி.ஐ.டி. அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்ட சந்திரபாபு நாயுடுவிடம் ஊழல் வழக்கு தொடர்பாக பல மணி நேரம் விசாரணை நடத்தினர்.

விசாரணையை தொடர்ந்து விஜயவாடாவில் உள்ள ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் சந்திரபாபு நாயுடு ஆஜர்படுத்தப்பட்டார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி தரும்படி மாநில குற்ற புலனாய்வு துறை தரப்பில் முறையிடப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, சந்திரபாபு நாயுடுவை 14 நாள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனை அடுத்து, சந்திரபாபு நாயுடுவை ராஜமுந்திரி சிறைக்கு போலீஸார் அழைத்து சென்றனர்.

இந்நிலையில் சந்திரபாபு நாயுடு 14 நாட்கள் சிறைக்கு செல்வதால் ஆந்திராவில் பதற்றமான சூழல் காணப்படுகிறது. மேலும் ஆந்திர மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தெலுங்கு தேசம் கட்சி ஆதரவாளர்கள் கொந்தளிப்பான மனநிலையில் உள்ளதால் அசம்பாவித சம்பவங்களை தவிர்க்க ஆந்திரா முழுவதும் ஆயிரக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். பேரணி, போராட்டம், கூட்டம் சேர்த்தல் உள்ளிட்டவற்றிற்கு மாநிலம் முழுவதும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், வன்முறை சம்பவங்கள் எதுவும் நிகழாமல் இருக்க பாதுகாப்பு கருதி துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

Kathir

Next Post

#Breaking: இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் நாளை ஒத்திவைப்பு…!

Sun Sep 10 , 2023
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பர்4 சுற்றில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதனைத்தொடர்ந்து களமிறங்கிய இந்தியா அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் ரோஹித் ஷர்மா மற்றும் கில் இருவரும் பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர்களை வெளுத்து வாங்கினர். இந்தியாவின் முதல் விக்கெட் 16.4 ஓவர்களில் 121 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விழுந்தது, அதிரடியாக விளையாடிய கேப்டன் […]

You May Like