fbpx

தமிழ்நாட்டில் இன்று 14 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் மழை..!! வானிலை மையம் எச்சரிக்கை..!!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் கனமழை பெய்தது. பிறகு அப்டியே படிப்படியாக சில மாவட்டங்களில் கனமழை குறைந்தது. இந்நிலையில், இன்று தஞ்சை, புதுக்கோட்டை, நாகை, மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, நெல்லை, திருவாரூர், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 14 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 20-21 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது.

Chella

Next Post

’உத்தரவு ஏதும் பிறப்பிக்க முடியாது’..!! ஓபிஎஸ் வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி..!!

Fri Jan 19 , 2024
அதிமுகவில் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட பதவி நீக்கம், தேர்தல் தொடர்பான தீர்மானங்களுக்கு தடை விதிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 25ஆம் தேதி தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, எஸ்.வி.என்.பாட்டி உள்ளிட்டோர் அடங்கிய அமர்வு கடந்த டிசம்பர் 8ஆம் தேதி விசாரணை […]

You May Like