fbpx

பரபரப்பு…! ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேர் கைது…! வலைகள், ஜிபிஎஸ் கருவிகளை சேதப்படுத்திய இலங்கை கடற்படையினர்…!

ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேர் 2 படகுகளுடன் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை கடுமையாக தாக்கி, வலைகள், ஜிபிஎஸ் கருவிகளை சேதப்படுத்தியதாகவும் படகுகளை மோத வைத்து சேதம் ஏற்படுத்தியதாகவும் கரை திரும்பிய மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடல் எல்லை பகுதியில் மீன்பிடித்து வருகின்றனர். இவ்வாறு கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்யும் சம்பவம் தொடர்ந்து நீடித்து வருகிறது.

மீனவர்களை சிறை பிடிப்பது மட்டும் இன்றி அவர்களின் படகுகளை பறிமுதல் செய்வது, மீன் பிடி பொருட்களை சேதப்படுத்துவது என பல்வேறு அட்டூழியங்களிலும் இலங்கை கடற்படையினர் ஈடுபட்டு வருகிறார்கள். இலங்கை கடற்படையினரின் இந்த அத்துமீறிய செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று தமிழக அரசு, மத்திய அரசிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறது. எனினும், இந்த விவகாரத்தில் இதுவரை உறுதியான தீர்வு எட்டப்படவில்லை.

இந்த நிலையில் நேற்று கடலுக்கு மீன் பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேர் 2 படகுகளுடன் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை கடுமையாக தாக்கி, வலைகள், ஜிபிஎஸ் கருவிகளை சேதப்படுத்தியதாகவும் படகுகளை மோத வைத்து சேதம் ஏற்படுத்தியதாகவும் கரை திரும்பிய மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

English Summary

14 Rameswaram fishermen arrested.

Vignesh

Next Post

ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி!. பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம்!. 5வது முறையாக சாம்பியன்!

Thu Dec 5 , 2024
Junior Asia Cup Hockey: ஜூனியர் ஹாக்கி ஆசிய கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை 5-3 என்ற கோல் கணக்கில் வென்று இந்தியா 5வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. ஓமன் நாட்டில் உள்ள மஸ்கட் நகரில் புதன்கிழமை அன்று இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் இந்திய அணி தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியது. இந்தியா சார்பில் அரைஜீத் சிங் நான்கு கோல்களை பதிவு செய்தார். 4, 18 […]

You May Like