நாட்டில் பெண்கள், சிறுமிகள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருவது கவலையளிக்கிறது. காவல்துறையினர் இந்த குற்றச்சம்பவங்களை தடுக்க பல்வேறு கட்ட நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும், குற்றங்கள் குறைந்தபாடில்லை.
இந்நிலையில், அப்படி ஒரு சம்பவம் தான் உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹர் மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது. 14 வயது பட்டியலினச் சாதிப் பெண், தன்னை இரண்டு உயர்சாதி ஆட்கள் பாலியல் பலாத்காரம் செய்ததாக பரபரப்பு புகாரை அளித்திருக்கிறார்.
இரண்டு வாரங்களுக்கு முன்பு நரேஷ் சிங் மற்றும் ஹர்விந்திர குமார் ஆகிய இரண்டு நபர்கள் தன்னை பாலியல் வன்கொடுமை செய்தனர். பின்னர், தன்னை அச்சுறுத்தியதாகவும், சம்பவத்தை வெளியில் கூறாமல் இருக்க ரூ.100 கொடுத்து, நடந்த விஷயத்தை வெளியே சொல்லாமல் இருக்குமாறு வற்புறுத்தியதாகவும் சிறுமி போலீசிடம் கூறியுள்ளார்.
பணத்தை கொடுத்த பிறகும் தொடர்ந்து பலாத்காரம் செய்ததாக சிறுமி கூறியுள்ளார். சிறுமியின் புத்தகப் பையில் பணம் இருப்பதைக் கண்டு தாய் விசாரித்தபோது தான், இந்த சம்பவமே வெளிச்சத்திற்கு வந்தது. இந்த கொடூரமான சம்பவத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த தாய், உடனே காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, போலீசார் விசாரணை நடத்தி குற்றவாளிகளான நரேஷ் சிங் மற்றும் ஹர்விந்திர குமார் ஆகியோரை கைது செய்தனர்.
Read More : காதலனுடன் உல்லாசம்..!! கர்ப்பமானதால் அதிர்ச்சி..!! கருவை கலைத்த +2 மாணவி மரணம்..!!