fbpx

ஒரே நாளில் ரூ.14,000 கோடி..!! 20,000 கிலோ தங்க நகைகள் விற்பனை..!! களைகட்டிய அட்சய திருதியை..!!

தமிழ்நாட்டில் நேற்று (மே 10) ஒரே நாளில் அட்சய திருதியை முன்னிட்டு சுமார் 20 டன் தங்க நகைகள் விற்பனையாகி உள்ளதாக கூறப்படுகிறது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 30 சதவிகிதம் அதிகம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது, நேற்று ஒரே நாளில் சுமார் 20,000 கிலோ தங்க நகைகள் விற்பனைச் செய்யப்பட்டுள்ளது.

இதன் தோராய மதிப்பு சுமார் 14,000 கோடி ரூபாய் ஆகும். கடந்த 10 நாட்களுக்கு முன்பிருந்தே அட்சய திருதியை முன்னிட்டு நகைக்கடைகளில் வியாபாரம் களைக்கட்ட துவங்கியது. பலரும் நேற்று டெலிவரி எடுத்துக் கொள்ளும் வகையில் 10 நாட்களுக்கு முன்பிருந்தே 10 சதவீதம் முன்பணம் செலுத்தி வந்தனர். அட்சய திருதியை முன்னிட்டு, தங்கத்தின் எடைக்கு எடை வெள்ளி இலவசம், சிறப்பு தள்ளுபடி, செய்கூலியில் தள்ளுபடி என்று விதவிதமான வியாபார யுக்திகளுடன் நகைக்கடைகள் இல்லத்தரசிகளை தங்கள் கடைகளுக்கு வர வைத்தன.

பொதுமக்கள் அதிகளவில் தங்க நகைகளை வாங்க ஆர்வம் காட்டியதால், நேற்று ஒரே நாளில் அடுத்தடுத்து 3 முறை தங்கம் விலை உயர்ந்தது. அட்சய திருதியை ஆராவாரம் முடிந்த நிலையில், இன்று தங்கத்தின் விலை குறைய துவங்கியுள்ளது.

Read More : விஜயகாந்த் நினைவிடத்தில் பத்ம பூஷண் விருது.!! மரியாதை செலுத்திய பிரேமலதா..!!

Chella

Next Post

பெற்றோர்களே உஷார்..!! மேகி சாப்பிட்ட 10 வயது குழந்தை பலி..!! குடும்பத்தினருக்கு தீவிர சிகிச்சை..!!

Sat May 11 , 2024
உத்தரப்பிரதேச மாநிலம் பிலிபிட் என்ற பகுதியில் மேகி சாப்பிட்ட 10 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சமீப காலங்களாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மேகி சாப்பிட விரும்புகின்றனர். இது விரைவாக சமைக்கும் ஒரு சுவையான நொறுக்குத் தீனி ஆகும். ஆனால் பிலிபிட்டில், ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் மேகி சாப்பிட்டதால் நோய் வாய்ப்பட்டுள்ளனர். இதில், 10 வயது அப்பாவி குழந்தை […]

You May Like