உத்தரப்பிரதேச மாநிலம் கௌதம புத்த நகர் மாவட்டத்தில் இன்று முதல் வரும் 30-ம் தேதி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது..
உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டா உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கிய கௌதம் புத்த நகர் மாவட்டத்தில் 144 தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. பிரிவு 144 இன் கீழ் வரும் கட்டுப்பாடுகள் ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 30, 2023 வரை அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. வரவிருக்கும் திருவிழாக்கள் மற்றும் ஏப்ரல் 4 ஆம் தேதி மகாவீர் ஜெயந்தி மற்றும் ஏப்ரல் 6 ஆம் தேதி அனுமன் ஜெயந்தி உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
144வது பிரிவின் கீழ், மாவட்டத்தில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் கூடுவதை நிர்வாகம் தடை செய்துள்ளது. இதற்கான உத்தரவை நொய்டா காவல்துறை வெளியிட்டுள்ளது.. மேலும், மாவட்டத்தில் விதிகளை யாராவது மீற முயன்றால், அவர் மீது ஐபிசி பிரிவு 188 இன் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது..
144 தடை உத்தரவில் எதற்கெல்லாம் தடை :
- 5 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் ஒரு குழுவில் ஒன்றாக நிற்க முடியாது.
- ஊர்வலம் செல்ல முடியாது. மாவட்டத்தில் உள்ள எந்த ஒரு அரசு அலுவலகம் அல்லது அரசு குடியிருப்புக்கு அருகில் புகைப்படம் அல்லது ஆளில்லா விமானத்தை பறக்கவிட முடியாது.
- பொது இடங்களில் மது அருந்துவோ அல்லது போதைப்பொருள் உட்கொள்ளவோ கூடாது..
- பொது இடங்களில் வழிபடவோ, பிரார்த்தனை செய்யவோ முடியாது. இதை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
- பொது இடங்களில் துப்பாக்கி அல்லது கத்தியுடன் சுற்றித் திரிய முடியாது. பொது இடங்களில் அல்லது எங்கும் துப்பாக்கிச் சூடு நடத்த அனுமதி இல்லை.