fbpx

கஞ்சாவுடன் சிக்கிய சவுக்கு சங்கருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்! கோர்ட் அதிரடி..

கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட பிரபல யூட்டியுபர் சவுக்கு சங்கரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க மதுரை போதை பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் காவல்துறை அதிகாரிகள், பெண் போலீசார் குறித்து
அவதூறாக பேசிய வழக்கில் கடந்த 4-ஆம் தேதி தேனி மாவட்டத்தில் கோவை சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.  பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.  அந்த கைது நடவடிக்கையின் போது கஞ்சா வைத்திருந்ததாக நேற்று மீண்டும் கைது செய்யப்பட்டார்.  

இந்நிலையில், கஞ்சா வழக்கு தொடர்பாக சவுக்கு சங்கர் இன்று சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார். மதுரை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் மீதான விசாரணை நடைபெற்று வந்தது. மதுரை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் ஆஜரானார்.

இந்த வழக்கு நீதிபதி செங்கமலச்செல்வன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதியிடம், கோவை சிறையில் 10 காவலர்கள் சேர்ந்து தன்னை தாக்கியதாகவும்,  கோவை சிறையில் தனக்கு பாதுகாப்பில்லை எனவும் சவுக்கு சங்கர் கூறினார்.  தனது பாதுகாப்பிற்காக மதுரை சிறைக்கு தன்னை மாற்றுமாறு கோரிக்கை விடுத்தார்.  அதற்கு பதிலளித்த நீதிபதி, வேறு சிறைக்கு மாற்றுவதற்கு எனக்கு அதிகாரம் இல்லை.  ஆகவே சிறைத்துறைக்கு கடிதம் மூலமாக கோரிக்கை விடுத்துக் கொள்ளுங்கள் எனக் கூறினார்.

வழக்கை விசாரித்த நீதிபதி மே 22 ஆம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைத்து சவுக்கு சங்கரிடம் விசாரணை செய்ய நீதிபதி செங்கமல செல்வன் உத்தரவிட்டுள்ளார். கோவை மத்திய சிறையில் இருந்து அழைத்து வரப்பட்ட சவுக்கு சங்கர் வலது கையில் கட்டு போட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Post

சென்னையில் மீண்டும் ஒரு சம்பவம்.. வளர்ப்பு நாய் கடித்து சிறுவன் காயம்.. ஆர்டர் போட்டும் கேக்கலையே!

Wed May 8 , 2024
சென்னையில் 5 வயது சிறுமியை நாய் கடித்த சம்பவம் அடங்குவதற்குள், காவலர் குடியிருப்பில் சிறுவன் ஒருவனை நாய் கடித்திருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  சென்னை வேளச்சேரி பகுதியைச் சேர்ந்த சிறுவன் அஸ்வந்த், பள்ளி விடுமுறையொட்டி, ஆலந்தூரில் காவலர் குடியிருப்பில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தார். அங்கு விளையாடிக் கொண்டிருந்தபோது, ஹஸ்கி ரக வளர்ப்பு நாய் ஒன்று கடித்ததில், அஸ்வந்துக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அஸ்வந்தின் அத்தை,  மாமா வேலைக்கு சென்றிருந்த நிலையில்,  […]

You May Like