Delhi railway station: மகா கும்பமேளா செல்வதற்காக டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசலில் சிக்கி 4 குழந்தைகள் உட்பட பலியானோர் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி ரெயில் நிலையத்தில் நேற்று இரவு திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனால் 14 மற்றும் 15 நடைமேடைகளில் கூட்ட நெரிசல் அதிகமானது. இதில் 3 குழந்தைகள் உட்பட சிக்கி 15 பேர் உயிரிழந்தனர். பெண்கள் பலர் மயக்கம் அடைந்தனர். கும்பமேளா செல்வதற்காக ஒரே நேரத்தில் அதிக அளவில் பயணிகள் குவிந்ததால் டெல்லி ரயில் நிலையத்தில் நெரிசல் ஏற்பட்டது. இரவு 9.50 மணியளவில் ரயில்கள் ரத்து செய்யப்பட்டதாக வதந்தி பரவியது. இதனையடுத்து பிரயாக்ராஜுக்கு போக ஏற்கெனவே நின்றுக்கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் மொத்த கூட்டமும் முந்தியடித்துக்கொண்டு ஏறியது. இதில், பலரும் நெரசலில் சிக்கி மயக்கமடைந்தனர்.
சம்பவத்தையடுத்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து 4 தீயணைப்பு வாகனங்களில் மீட்பு படையினரும், தேசிய பேரிடர் மீட்பு படையினரும் உடனடியாக டெல்லி ரயில் நிலையத்திற்கு விரைந்தனர். நெரிசலில் சிக்கிய பலர் மயக்கமடைந்துள்ளதாகவும், 15 பேர் காயமடைந்துள்ளதாகவும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகின.
காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் ரயில் நிலையத்தில் நெரிசல் சம்பவம் ஏதும் நடக்கவில்லை என்றும், அது வதந்தி எனவும், கும்பமேளா நடைபெறும் பிரக்யராஜுக்கு 2 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன என்றும் வடக்கு ரயில்வே அறிக்கை விட்டது. இருப்பினும் கூட்ட நெரிசல் குறித்த வீடியோ வெளியான நிலையில், பலியானோர் எண்ணிக்கை 4 குழந்தைகள் உட்பட 18ஆக அதிகரித்துள்ளது.
இந்த துயர சம்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, உறவினர்களை இழந்தவர்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.. அதேநரம், காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைய வேண்டுவதாகவும் கூறியுள்ளார். மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் உயிரிழப்புகளுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.