HIV: உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வார் மாவட்ட சிறையில் வழக்கமான சுகாதார பரிசோதனையின் போது , பதினைந்து புதிய கைதிகளுக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
நிலையான நடைமுறையின் ஒரு பகுதியாக, சிறையில் அடைக்கப்படுவதற்கு முன்பு அனைத்து புதிய கைதிகளும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். அந்தவகையில், பாதிக்கப்பட்ட கைதிகளுக்கு முறையான மருத்துவ பராமரிப்பு மற்றும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்தநிலையில், கடந்த 7 ஆம் தேதி, அனைத்து புதிய கைதிகளுக்கும் எச்.ஐ.வி பரிசோதனைகள் உட்பட சுகாதார பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளது. “புதிய கைதி சிறைக்குள் நுழையும் போதெல்லாம், சுகாதார பரிசோதனை நடத்தப்படுகிறது. எச்.ஐ.வி பரிசோதனையும் கட்டாயமாகும், தற்போது,சுமார் 15 கைதிகளுக்கு எச்.ஐ.வி தொற்று உள்ளது” கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 7 ஆம் தேதி உலக சுகாதார தினத்தன்று சிறைக்குள் ஒரு சுகாதார முகாம் ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் இந்த கைதிகளுக்கு சிகிச்சை அளிக்க தனி முகாம் உருவாக்கப்பட்டுள்ளது. ஹரித்வார் மாவட்ட சிறையில் 1,100 கைதிகள் உள்ளனர் என்று சிறை அதிகாரிகள் கூறினர். முன்னதாக கடந்த 2023ம் ஆண்டு இந்தியாவில் கண்டறியப்பட்ட எச்.ஐ.வி. தொற்றுகளின் எண்ணிக்கை 2010ல் பதிவான எண்ணிக்கையைவிட 44 சதவீதம் குறைந்துள்ளதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல்வாழ்வுத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.