பெண் குழந்தை பிறந்த சில நிமிடங்களில் 15 வயது சிறுமி ஒருவர் தனது பிறந்த குழந்தையை இரண்டு மாடி கட்டிடத்தின் கூரையில் இருந்து தூக்கி எறிந்து குற்ற சம்பவம் குஜராத் மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் கூறுகையில், “அவர் வீட்டில் தனியாக இருந்தபோது அருகில் வசிக்கும் 20 வயதான இளைஞர் ஒருவர் அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக எங்களிடம் கூறினார். இதில் அவர் கர்ப்பம் அடைந்துள்ளார்.
உள்ளூர் மக்களிடம் விசாரித்த பிறகு, திங்கள்கிழமை அதிகாலையில் பிரசவித்த உடனேயே குழந்தையை கட்டிடத்திலிருந்து தூக்கி எறிந்தது தெரியவந்துள்ளது. சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில், சந்தேக நபரை அடையாளம் கண்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.